Karthigai Deepam: சின்ன மாமியாருக்கு மாப்பிள்ளை பார்க்கும் மருமகன்.. சந்திரகலாவுக்கு வந்த சோதனை!
கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலாவிற்கு எதிராக கார்த்திக் செய்யும் திட்டம் என்ன என்பதை கீழே காணலாம்.

தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி திசை திருப்பி கார்த்தியை காப்பாற்றி தனக்கு எல்லா உண்மையும் தெரியும் என ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அத்தைக்கு வரன் பார்க்கும் கார்த்திக்:
அதாவது, சிவனாண்டியிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வர இதைப் பார்த்த சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். கார்த்தியின் ஏற்பாட்டில் தான் இது நடந்திருக்கிறது என்பது தெரிய வர மயில்வாகனம் மற்றும் கார்த்திக் என இருவரும் சேர்ந்து கொண்டு, அத்தைக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து ஒரு நல்ல வரன் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சாமுண்டீஸ்வரியும் இதை கேட்டு ஆம் எனக்கு இது தோணாமல் போயிடுச்சு என்று சொல்லி சந்திரகலாவை விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட சொல்ல அவளும் வேறு என்ன செய்வது எனக்கு தெரியாமல் கையெழுத்து போடுகிறாள்.
வாக்கு கொடுக்கும் கார்த்திக்:
துர்கா கல்யாணத்தை நினைத்து கவலைப்பட கார்த்தி உனக்கும் நவீனுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறான். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டில் பந்த கால் நிகழ்ச்சி தொடங்குகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.




















