Karthigai Deepam: "ரொம்ப பழைய டெக்னிக்தான்.. ஆனாலும்" மயில்வாகனம் போடும் மாஸ்டர் ப்ளான்!
karthigai deepam serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரயலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

karthigai deepam serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நர்ஸை தேடி சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மயில்வாகனம் போடும் மாஸ்டர் ப்ளான்:
அதாவது, கார்த்திக் நர்ஸை தேடிச்செல்ல இன்னொரு பக்கம் நவீனின் கவனத்தை துர்கா பக்கம் திருப்ப வேண்டும் என்று மயில்வாகனம் ஐடியா கொடுக்கிறான்.
அப்படி செய்தால் தான் கார்த்திக்கும் ரேவதிக்கும் திருமணம் செய்து வைக்க முடியும் என திட்டமிட்டு, கீழே எண்ணெய்யை கொட்டி விட்டு துர்கா மற்றும் நவீனை வேறுவேறு காரணங்களை சொல்லி அழைத்து வருகின்றனர்.
திட்டமிட்டபடி துர்கா எண்ணெய்யில் கால் வைத்து வழுக்கி விழ நவீன் அவளை தாங்கி பிடிக்கிறான். அடுத்து பரமேஸ்வரி பாட்டி பேரன்கள் அருண் ஆனந்த்துடன் சேர்ந்து மகேஷை கடத்த திட்டம் போட மாயா இதை அறிந்து மகேஷை எச்சரிக்கிறாள்.
பரமேஸ்வரி முன் தோன்றிய முருகன்:
நவீன் ரெஸ்ட் ரூம் போக வர, அவனிடம் மகேஷ் ரூமை பயன்படுத்திக்கொள்ள சொல்கிறாள். இதனால் அருண் ஆனந்த் மஹேஷ்க்கு பதிலாக நவீனை கடத்தி விடுகின்றனர். கார்த்திக் நர்ஸை தேடி கண்டுபிடித்து விஷயத்தை சொல்ல நர்ஸ் உண்மையை சொல்ல வருவதாக சொல்லி கிளம்பி வருகிறார்.
பாட்டி முருகன் கோவிலுக்கு சென்று புலம்ப முருகன் கண்முன் தோன்றி என்ன பாட்டி என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? கண்டிப்பா கார்த்திக் ரேவதி கல்யாணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

