Karthigai Deepam: குழியில் இறங்கப்போகும் பரமேஸ்வரி.. சிலையை கண்டுபிடிப்பாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரிக்காக பரமேஸ்வரி குழியில் இறங்கப்போகும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை பஞ்சாயத்தில் நிறுத்தி பழி போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குழியில் இறங்கப்போகும் பரமேஸ்வரி:
அதாவது, சிலையை கடத்தியது சாமுண்டீஸ்வரி தான், அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் இல்லையென்றால் சிலை கிடைக்கும் வரை குழிக்குள் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
சாமுண்டீஸ்வரி சிலை காணமால் போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, அப்படி இருக்கும் போது நான் ஏன் இதையெல்லாம் செய்யணும்? என்று கேள்வி கேட்கிறாள். ஆனால் பஞ்சாயத்தார் தங்களது முடிவில் உறுதியாக இருக்க பரமேஸ்வரி பாட்டி என் மருமகள் இப்படி பண்ணி இருக்க மாட்டா. அவளுக்காக நான் குழியில் இறங்குகிறேன் என்று வாக்கு கொடுக்கிறாள்.
உண்மையை அறிந்த கார்த்திக்:
அடுத்து மறுபக்கம் காளியம்மா, முத்துவேல், சிவனாண்டி ஆகியோர் கூட்டு சேர்ந்து சிலை விற்று விட திட்டமிடுகின்றனர். முத்துவேல் சந்திரகலாவுக்கு போன் செய்ய ரேவதி போனை எடுக்கிறாள். இது தெரியாமல் முத்துவேல் சிலை எங்ககிட்ட தான் இருக்கு, விற்க போறோம் என்று சொல்ல ரேவதி இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறாள்.
அடுத்து சந்திரகலா முத்துவேலுக்கு போன் செய்ய, அவன் என்ன மகளே இப்போ தானே பேசினோம் என்று சொல்ல சந்திரகலாவுக்கு ரேவதி மீது சந்தேகம் உருவாகிறது. நம்ம திட்டம் லீக் ஆகிருச்சு என்று முத்துவேலிடம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? கார்த்திக் சிலையை மீட்கப்போவது எப்படி? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















