Karthigai Deepam: அம்மா மடியில் உயிரிழந்த மகன்.. நின்றுபோன திருவிழா - கார்த்திகை தீபத்தில் சோகம்
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கின் தாயார் அபிராமி கார் மோதி உயிரிழந்த நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இன்று முதல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.
கார்த்திக் மடியில் உயிரிழந்த அம்மா:
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அபிராமி ரவுடிகளின் பிடியிலிருந்து தப்பி ஓடிவந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அபிராமி தப்பி ஓடி வர ஒரு இடத்தில் எதிரில் வந்து காரின் மீது மோது கீழே விழுகிறாள். கார்த்திக் தூரத்தில் இருந்து பார்த்து ஓடி வந்து அம்மாவை தனது மடியில் சாய்த்து ஏன்மா என்னாச்சு? என்று கண் கலங்குகிறான். அபிராமி நீ ரேவதியுடன் நல்லா வாழனும் என்று சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்டு கார்த்தியின் மடியில் உயிரை விட கார்த்திக் கண்ணீரில் தவிக்கிறான்.
அதிர்ச்சியில் சாமுண்டீஸ்வரி:
பிறகு கோவிலில் அபிராமி இறந்து விட்டதால் திருவிழா இல்லை என்று சொல்லி திருவிழாவை நிறுத்துகின்றனர். சாமுண்டீஸ்வரி ஊருக்கு கிளம்பலாம் என்று சொல்ல சந்திரகலா அபிராமியின் இறுதி சடங்கில் அவளது மகன் கார்த்திக் தான் என்பதை தெரிய வந்து விடும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அதை நம்ப மறுக்கிறாள்.
பிறகு ரேவதியின் மனதை மாற்றி அவளை இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்து வர அபிராமிக்கு கொல்லி வைப்பது கார்த்தி தான் எனக்கு தெரிந்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வந்து மறைத்து வைத்திருக்கும் போட்டோவை எடுத்து பார்க்க அதில் அபிராமி இருப்பது தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















