karthigai deepam: புருஷனின் அந்த வீடியோவை டெலிட் செய்த பொண்டாட்டி! ஷாக்கில் சந்திரகலா - அனல் பறக்கும் கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலாவிடம் சிக்கிய கார்த்தியின் வீடியோவை ரேவதி அழித்த நிலையில், அடுத்து நடக்கப்போவதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் கார்த்தியை சிக்க வைக்க வீடியோ ஆதாரத்தை காட்டினாள். இந்த பரபரப்பான சூழலில், இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
செல்போனில் மிஸ்ஸான வீடியோ:
அதாவது, சந்திரகலா வீடியோ ஆதாரத்தை காட்ட போனை சாமுண்டீஸ்வரியிடம் காட்டினாள். ஆனால், அதில் வீடியோ இல்லாததால் ஷாக் ஆகிறாள். மேலும் சந்திரகலா போனில் இருந்த வீடியோ எங்க போச்சு என்று குழப்பத்திற்கு ஆளாகிறாள். ரேவதி அதை நான் தான் டெலீட் பண்ணேன் என்று பதிலடி கொடுக்கிறாள்.
ரேவதியால் ஷாக்கான சந்திரகலா:
கார்த்திக் இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்க தான் வந்திருக்காரு என்று எனக்கு நல்லாவே தெரியும் என சொல்ல சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு நான் வெஜ் ஆர்டர் செய்து எல்லாரையும் சாப்பிட கூப்பிட கார்த்திக் மறுக்க முடியாமல் சாப்பிட உட்காருகிறான்.
சாப்பிட விடாமல் தடுத்த கார்த்திக்:
மயில்வாகனம் போன் செய்து அந்த சாப்பாட்டை சாப்பிடாதீங்க என்று கார்த்தியிடம் சொல்ல கார்த்திக் அதில் பல்லி விழுந்து இருப்பதாக சொல்கிறான். ஆனால் இதை நம்ப மறுக்கும் சந்திரகலா நான் வெஜ்ஜை ரசித்து ருசித்து சாப்பிட துர்காவை பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரும் சாப்பிடுகின்றனர்.
எல்லாரும் மயங்கி விழுகின்றனர். ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட சந்திரகலா கார்த்திக், மயில் வாகனம் மீது பழி போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலை இன்று தவறாமல் பாருங்கள்.





















