Karthigai Deepam: செங்கல் சூளையை விற்கப்போகும் சாமுண்டீஸ்வரி.. சண்டை மூட்டிவிட சந்திரகலா சதி!
கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செங்கல் சூளை தொழிலாளர்கள் கார்த்தி குறித்து பேச, சாமுண்டீஸ்வரி கோபம் அடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சூளையை விற்கப்போகும் சாமுண்டீஸ்வரி:
அதாவது, செங்கல் சூளை தொழிலார்கள் கார்த்திக் குறித்து பேசியதால் கடுப்பாகி சூளையை விற்க முடிவெடுக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து மயில்வாகனமும் சாமுண்டீஸ்வரியிடம் இது வேண்டாம் என்று பேசுகிறான்.
ஆனாலும் சாமுண்டீஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். அடுத்து காளியம்மா, சிவனாண்டி ஆகியோர் சந்திரகலாவை சந்திக்க சாமுண்டீஸ்வரி எடுத்திருக்கும் முடிவு குறித்து தெரிந்து கொள்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடுகின்றனர்.
நேரில் வந்த கார்த்திக்:
அடுத்து சந்திரகலா ஒரு ஆளை ஏற்பாடு செய்து அனுப்ப அவன் கார்த்தியிடம் சென்று சாமுண்டீஸ்வரி செங்கல் சூளையை விற்க போறதாக சொல்றாங்க. நீங்க வாங்க என்று அழைக்க கார்த்திக் அங்கு கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















