Karthigai Deepam:சடலத்திற்காக தோண்டிய நிலத்தில்.. சிவனாண்டிக்கு கிடைத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: பரமேஸ்வரி பாட்டியின் நிலத்தில் சடலத்திற்காக தோண்டியபோது கிடைத்த பொருளால் சிவனாண்டி அதிர்ச்சியில் உறைந்தார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த சனிக்கிழமை எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி நிலத்தில் சடலம் இருப்பதாக சொல்லி தோண்ட தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சடலத்திற்காக தோண்ட கிடைத்த சாமி சிலை:
அதாவது, நிலத்தில் தோண்ட தோண்ட கடைசியில் சாமி சிலை கிடைக்க அனைவரும் ஆச்சர்யம் அடைகின்றனர். ஆனால் சிவனாண்டி அண்ட் கோ அதிர்ச்சி அடைகின்றனர்.
கார்த்திக் இங்க பாருங்க நிலத்தில் இருந்து சாமி சிலை தான் கிடைத்து இருக்கு, இது ரொம்ப நல்ல இடம் என்று சொல்ல ஊர் மக்களும் அதை ஏற்று கொள்கின்றனர்.
கையெழுத்து போட்ட சாமுண்டீஸ்வரி:
இந்த இடத்தை எழுதி கொடுக்க ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட வேண்டும் என்று தெரிய வருகிறது. ஊர் மக்கள் எல்லாரும் கேட்க கடைசியில் சாமுண்டீஸ்வரியும் கையெழுத்து போட்டு நிலத்தை ஹாஸ்பிடல் கட்ட எழுதி கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக்கை பழி தீர்க்க அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















