Karthigai Deepam: நம்பிக்கை துரோகி.. மாப்பிள்ளையை வறுத்தெடுத்த மாமியார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்திக் மீது மிகுந்த கோபத்தில் இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்தியை எச்சரித்த பரமேஸ்வரி:
அதாவது கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரியை சந்திரகலா மேலும் ஏற்றி விடுகிறாள். மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி நடந்த விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறார். வீட்டிற்குள் வந்த கார்த்திக், நான் சாமுண்டீஸ்வரி அத்தை வீட்டிற்கு போறேன் என்று சொல்ல பாட்டி அவ பயங்கர கோபத்தில் இருப்பா.. இப்போதைக்கு அங்க போக வேண்டாம் என்று சொல்கிறார்.
ஆனால் கார்த்திக் இப்படியே போகாமல் இருந்தால் எப்படி? அவங்களுக்காக இல்லனாலும் ரேவதிக்காக போகணும்ல என்று சொல்லி கிளம்பி வருகிறான்.
நம்பிக்கை துரோகி:
கார்த்தியை சாமுண்டீஸ்வரி நம்பிக்கை துரோகி என அவமானப்படுத்தி ஆவேசமாக பேசுகிறாள். இனிமே உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறாள். இதனால் ரேவதி நானும் அவருடன் போறேன் என்று கிளம்புகிறாள்.
துப்பாக்கியை கையில் எடுத்த சாமுண்டேஸ்வரி நீ போனா என்னை நானே சுட்டுக்கிட்டு செத்து போய்டுவேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















