Karthigai Deepam: பெரும் சதி.. திருவிழாவை கெடுக்க பிரசாதத்தில் விஷம் - அடுத்து நடந்தது என்ன?
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று பிரசாதத்தில் விஷம் கலந்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி முளைப்பாரி எடுக்க சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஆசையுடன் காத்திருக்கும் சாமுண்டீஸ்வரி மகள்:
அதாவது, சாமுண்டீஸ்வரி சம்மதம் சொன்னதால் மகள்கள் நாலு பேரும் முதல்முறையாக முளைப்பாரி எடுப்பதால் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னொரு பக்கம் சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் சந்தித்து இந்த விழாவை எப்படியாவது கெடுக்கணும் என யோசிக்கின்றனர். இன்னொரு பக்கம் இன்ஸ்பெக்டர் இவர்களுடன் சேர்ந்து திருவிழாவை சீர்குலைக்க திட்டம் போடுகின்றனர்.
பிரசாதத்தில் விஷம்:
உடனே பக்தர்களுக்காக சமைக்கும் உணவில் விஷத்தை கலக்க முடிவெடுக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் செய்து விஷத்தையும் கலக்கின்றனர். இது தெரியாமல் கோவிலில் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
ரேவதி, கார்த்தி ஆகியோர் கடை வீதிக்கு செல்ல இருவரும் சேர்ந்து பலூன் சூட் கேம் விளையாடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சாமுண்டீஸ்வரிக்கு கார்த்திக் யார் என்று தெரிய வைக்க ஒரு புறம் திட்டம் நடக்கும் நிலையில், மறுபுறம் திருவிழாவை கெடுக்கவும் சதி நடப்பதால் இந்த சீரியல் சூடுபிடித்துள்ளது.





















