Ayali: ஓடிப்போக ப்ளான் போடும் தோழி.. காண்டான அயலி - இன்று அயலி சீரியலில் இதுதான்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலி சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் ரித்விகாவுக்கு உணவு சேராமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இந்திராணி குடும்பத்தினர் கோபப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இந்திராணி கோபம்:
அதாவது, ஜமுனாவுக்கு போன் போட்டு இந்திராணி குடும்பத்தினர் ஃபுட் அலர்ஜி இருக்கும் விஷயத்தை ஏன் மறைச்சீங்க என்று கேள்வி கேட்க இவர்கள் அது சின்ன விஷயம் என்பதால் சொல்லவில்லை என மழுப்புகின்றனர்.
இதையடுத்து அயலி தான் இந்த விஷயத்தை இந்திராணி வீட்டில் சொல்லி இருக்க வேண்டும் என கோபப்படுகின்றனர். அவள் இல்லை என்று சொல்லியும், நம்ப மறுத்து குடும்பம் சம்பந்தமாக யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று சத்தியம் வாங்குகின்றனர்.
ஷாக்கில் அயலி:
இதை தொடர்ந்து அயலி மற்றும் சிவா கடைக்கு வருகின்றனர். அப்போது அங்கு அயலியின் பள்ளி தோழி ஒருவனுடன் ஓடிப்போவது குறித்து பேசிக் கொண்டிருக்க அயலி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.
தீபா என்ற பெண்ணுக்கு அறிவுரை சொல்ல எனக்கு என் குடும்பத்தை விட காதல் தான் முக்கியம் என்று பதில் கொடுக்க அயலி டென்ஷன் ஆகிறாள். இந்த நிலையில், அயலி அடுத்து என்ன செய்யப்போகிறாள்? என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.



















