![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Siragadikka Aasai: ரோகிணி போடும் திட்டம்.. வீட்டில் வெடிக்கப்போகும் பிரச்சினை.. சிறகடிக்க ஆசை அப்டேட்..
Siragadikka Aasai This Week: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் திங்கள் முதல் சனிவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக உள்ளது.
![Siragadikka Aasai: ரோகிணி போடும் திட்டம்.. வீட்டில் வெடிக்கப்போகும் பிரச்சினை.. சிறகடிக்க ஆசை அப்டேட்.. vijay tv siragadikka aasai serial this week may 20th to 25th promo Siragadikka Aasai: ரோகிணி போடும் திட்டம்.. வீட்டில் வெடிக்கப்போகும் பிரச்சினை.. சிறகடிக்க ஆசை அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/08b6dea23003efcbe8a0438b538686441716101119688572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி காணலாம்.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். எஸ்.குமரன் இயக்கி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் உள்ளது. வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆர்.சுந்தரராஜன், பாக்யலட்சுமி, அனிலா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, சல்மா அருண் கல்யாணி, ப்ரீத்தா ரெட்டி என ஏகப்பட்ட பேர் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
கடந்த வாரம் ரீவைண்ட்
முத்து, மீனா இடையே முதல் திருமண நாள் வருகிறது. இதற்கான மீனாவின் அம்மா சீருடன் முத்து வீட்டுக்கு வருகிறார். அவரை விஜயா அவமானப்படுத்துகிறார். கல்யாண நாள் அன்று முத்து வீட்டுக்கு பாட்டி வருகை தருகிறார். முத்து, மீனாவின் திருமண நாள் அவர்கள் வீட்டில் வெகுவிமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது.
ரவியும் ஸ்ருதியும் சேர்த்து பெரிய சைஸ் கேக் ஒன்று வாங்கி வருகிறார்கள். மீனாவின் அம்மா, தங்கையும் அங்கே வருகிறார்கள். அப்போது வீட்டின் உள்ளே அனலா இருக்கிறது என ஸ்ருதியின் அம்மா சொல்ல ஏசி பிரச்னை வெடிக்கிறது.
இந்த வாரம் நடப்பது என்ன?
இந்த வாரம் அண்ணாமலையும், பாட்டியும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதாவது வீட்டில் 2 ரூம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு தம்பதியினரும் மாறி மாறி தங்கி கொள்ள சொல்கிறார்.முதலில் முத்து, மீனா மற்றும் ரவி, ஸ்ருதி ஆகியோர் தங்க வேண்டும் என சொல்கிறார்கள். அந்த ரூமுக்குள் தூங்க சென்றவுடன் மனோஜ் ஒவ்வொன்றுக்காக கதவை தட்ட முத்து டென்ஷனாகி இன்னொரு முறை கதவை தட்டினால் விரலை உடைத்து விடுவேன் என சொல்கிறார்.
பின்னர் மனோஜூக்கு ஹாலில் படுத்து தூக்கம் வராததை பற்றி ரோகிணியிடம் சொல்கிறார். அடுத்த வாரம் இதுக்கு ஒரு முடிவு வரும். ரவியும் ஸ்ருதியும், வெளியே படுக்க வேண்டும். ஸ்ருதியை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவ கண்டிப்பா பிரச்சினை பண்ணுவா என்கிறார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)