Neeya Nana: பாகிஸ்தானை கலாய்த்த ஸ்ரீகாந்த்.. வாயடைக்க வைத்த கோபிநாத் கேட்ட கேள்வி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் அக்டோபர் 8 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் நடைபெற்று வரும் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் நாளை (அக்டோபர் 8) ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை:
அதன்படி, இந்த வாரம் ‘இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வது உறுதி’ என்று ஒரு தரப்பும், ’இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு’ இல்லை என்று மற்றொரு தரப்பும் கலந்து கொள்ளும் விவாதம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் நானி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நீயா நானா:
பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தலைமையில் நடக்கும் இந்த ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் பிரபலமான இந்த நிகழ்ச்சி, ஆரம்பத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. ஆனால், தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் சரியாக மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதன்படி ஓவ்வொரு வாரமும் வெவ்வேறு விதமான தலைப்புகளில் விவாதம் நடைபெறுவது வழக்கும். இதில் சில விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.
அந்த வகையில், நாளை (அக்டோபர் 8 ) வெளியாக உள்ள நிகழ்ச்சியில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது உறுதி vs இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இல்லை என்றும் விவாதம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொண்டுள்ள ஸ்ரீகாந்த் ,நானி மற்றும் பத்ரிநாத ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.க்ஷ
பாகிஸ்தானுக்கு வாய்ப்பே இல்லை:
அந்த வகையில் தற்போது வெளியான பிரமோவில் ஸ்ரீகாந்த்,”இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் தான் டாப் 3 லிஸ்ட்டில் இருக்கும். இந்த மூனு டீம் தான் எனக்கு தெரிஞ்சு. பாகிஸ்தான்லாம் இந்தியாவுக்கு டூர் தான் வந்துருக்காங்க. இதுதான் கொல்கத்தா, இது தான் ஹைதராபாத் என்று பார்ப்பதற்குத்தான் வந்திருக்கிறார்கள்” என்று பாகிஸ்தான் அணியை கலாய்க்கிறார். உடனே குறிக்கிட்ட நானி,”இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னைப்பொறுத்தவரை அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணியுடன் சேர்த்து நான்காவது அணியாக, பாகிஸ்தான் அணியும் வரும் என்று நான் சொல்கிறேன்.”என்கிறார்.
உடனே, “வாய்ப்பே இல்லை” என்று தனக்கே உரித்தான நக்கல் பாணியில் ஸ்ரீகாந்த் குறிக்கிட, அருகில் இருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத், “பாகிஸ்தான் அரையிறுதிக்கு வர வாய்ப்பே இல்லை என்று சீக்கா (ஸ்ரீகாந்த்)சொல்கிறார். அந்த அளவிற்கா பாகிஸ்தான் அணி இருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார்.
ஸ்ரீகாந்தை வாயடைக்க வைத்த கோபிநாத்:
அதற்கு பதிலளிக்கும் ஸ்ரீகாந்த், “எனக்கு தெரிஞ்ச கிரிக்கெட்ட வச்சு சொல்றேன். பாகிஸ்தானின் முக்கியமான பந்து வீச்சாளர் நசீம் ஷா இல்லை. அவருக்கு பதில் ஹசன் அலி என்ற ஒரு புதிய வீரர் வந்திருக்கிறார். அவர் நம்மூர் ஷர்துல் தாக்கூர் மாதிரி. கொடுத்தால் ரன் கொடுத்துக்கொண்டே இருப்பான்.” என்று நக்கல் அடிக்கிறார்.
உடனே நானி, “இது இருபது ஓவர் போல அல்ல. இது ஐம்பது ஓவர் போட்டி. மாணவர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல. ஆண்கள் ஆடும் விளையாட்டு. பாகிஸ்தான் அணி வெளியில் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால், மைதானத்தில் அப்படி அல்ல.”என்று காரசாரமாக பேச, ஸ்ரீகாந்த குறிக்கிட்டு, “பாகிஸ்தான் அணி இது தான் அண்ணா அறிவாலயம், இது தான் அண்ணா பல்கலைகழகம், இது தான் மெரினா பீச் என்றுதான் சொல்வார்கள்” என தொடர்ந்து பாகிஸ்தான் அணியை நக்கலடிக்கிறார். இப்படியாக உள்ள அந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. தற்போது அந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் பலம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Meenakshi Ponnunga: குடிபோதையில் வந்து பிரச்சனை செய்த வெற்றி.. காணாமல் போன சக்தி.. மீனாட்சி பொண்ணுங்க இன்றும் நாளையும்!
மேலும் படிக்க: Kamal Haasan - Jovika: உயிரக் கொடுத்து கல்வி அவசியமா.. ஜோவிகா -விசித்ரா சண்டையில் ‘மய்யமாக’ கருத்து சொன்ன கமல்!