மேலும் அறிய

Kizhakku Vaasal, August 22: 'குறுக்கே வந்த குழந்தை’ .. அவமானப்பட்ட தயாளன்.. கிழக்கு வாசல் சீரியலில் இன்று நடப்பது என்ன?

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆகஸ்ட் 18) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

கிழக்கு வாசல் சீரியல் 

நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இன்றைய எபிசோட் அப்டேட்

ரேணுவை வீட்டுக்கு அழைத்து வரும் தயாளன் தனது மகன் அர்ஜுன் உடன் ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்ய திட்டம் போட்டதாக கூறி கண்டபடி திட்டுகிறார். இதனைக் கேட்டு சாமியப்பன் சிவகாமி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே சமயம் தயாளனுக்கு சப்போர்ட்டாக நடேசன் மாயாவும் பேச பரபரப்பு ஏற்படுகிறது. ஆனால் ரேணு அர்ஜுன் தான் ரிஜிஸ்டர் ஆபிசுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் மட்டுமே சென்றதாக சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகும் தயாளன் ரேணுவின் பிறப்பு குறித்தும் அவர் யாருக்கு பிறந்தவர் என தெரியுமா என கேள்வி எழுப்பி குடும்பத்தினரை திகைக்க வைக்கிறார். இதனைக் கேட்டு கோபமடையும் சாமியப்பன் தயாளனை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். தன்னுடைய பிறப்பு குறித்து பேசிய தயாளன் பேச்சை கேட்ட ரேணு அழுது கொண்டே சாமி முன்பு சென்று கையில் சூடம் ஏற்றி வந்து அனைவரும் முன்னிலையில் சத்தியம் செய்கிறார்.

ஆனால் இதனை தயாளன் நம்ப மறுக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டு குழந்தை ரேணுவின் போனை கொண்டு வந்து இதில் அர்ஜுன் மெசேஜ் செய்ததாகவும் போன் செய்ததாகவும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே சாமியப்பன் போனை வாங்கி செக் செய்து தயாளனிடம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் என கேள்வி எழுப்புகிறார். மேலும் வெளியே போகுமாறு எச்சரிக்கிறார். இதனைத் தொடர்ந்து தான் வசமாக சிக்கிக் கொண்டதே உணர்ந்த தயாளன் அங்கிருந்து கோபத்துடன் செல்கிறார். 

இதன் பின்னர் வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசும் சாமியப்பன் தயாளன் இப்படி பேசுவான் என எனக்கு முன்னாடியே தெரியும். ஆனால் அவன் பேசும்போது இங்கு இருக்கும் சிலர் ரேணுவுக்கு எதிராக பேசுவதை நினைத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து ரேணு தனக்கு நடந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு வீட்டை விட்டு எங்கேயாவது சென்றுவிடலாம் என வெளியேற நினைக்கிறார் அப்போது அவரை தடுக்கும் பார்வதி நீ அர்ஜுனுக்கு செய்த உதவி தவறில்லை என்றும் இப்போது நீ செய்வதுதான் தவறு என அறிவுரை கூறுகிறார். இப்படியான நிலையில் இன்றைய சீரியல் நிறைவுக்கு வருகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget