மேலும் அறிய

Baakiyalakshmi : சைக்கோ மாலினியின் அடுத்த மிரட்டல்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்... பாக்கியலட்சுமியில் இன்று

Baakiyalakshmi Oct 30 : செழியனை மிரட்டி பாக்கியா இருக்கும் கோயிலுக்கு அவனை வரவைத்த மாலினி. பாக்கியாவிடம் எல்லா உண்மையை சொல்லி அழுது விடுகிறான் செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 30) எபிசோடில் ஈஸ்வரி பாக்கியாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். "அவ இனிமேல் இங்க தான் இருப்பாளா?" என ராதிகாவை பற்றி ஈஸ்வரி கோபியிடம் கேட்டு கொண்டு இருக்கிறார். "இப்படி பிரச்சினை எல்லாம் வரக்கூடாது என்பதற்காக தான் வரமாட்டேன் என சொன்னேன்" என்கிறார் கோபி. இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது பாக்கியா வந்து ஈஸ்வரியிடம் கோயில் அன்னதானத்திற்கு ஆர்டர் கிடைத்து இருப்பது பற்றி சொல்கிறாள். செல்வியையும் காலையில் சீக்கிரமாக வர சொல்லி விட்டு செழியன் வீட்டுக்கு வராததால் அவனுக்கு போன் செய்து பார்க்கிறாள்.

Baakiyalakshmi : சைக்கோ மாலினியின் அடுத்த மிரட்டல்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்... பாக்கியலட்சுமியில் இன்று

"செழியனை என் சும்மா தொந்தரவு செய்யற? அவனுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கும். அந்த பையனை ஏன் இப்படி போட்டு படுத்துற " என கோபி பாக்கியாவிடம் கேட்க "அவன் வீட்டில் இருந்து கிளம்பி போய் ரொம்ப நேரம் ஆகுது. அவன் லீவில் இருக்கிறான். லீவில் கூட அப்படி என்ன வேலை" என பாக்கியா சொல்ல ஈஸ்வரி இதை வைத்து ஒரு பிரச்சினை வேண்டாம் நீ வா என சொல்லி கோபியை அழைத்து சென்று விடுகிறார்.

Baakiyalakshmi : சைக்கோ மாலினியின் அடுத்த மிரட்டல்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்... பாக்கியலட்சுமியில் இன்று

பாக்கியா எழிலை அழைத்து கொண்டு செழியன் ஆபீசுக்கு சென்று பார்க்கிறாள். அங்கே செழியன் லீவில் இருப்பதாக சொல்கிறார்கள். அப்போது செழியனுடன் வேலை செய்யும் ஒரு பையன் வரவே அவனிடம் மாலினியுடைய ப்ராஜெக்ட் பற்றி விசாரிக்கிறாள்  பாக்கியா. "அந்த ப்ராஜெக்ட் ரொம்ப சின்னது. அது எப்பவோ முடிஞ்சுது. செழியன் ஜெனிக்கு குழந்தை பிறந்ததில் இருந்து  ஆபீசுக்கு வரவேயில்லை " என சொல்ல பாக்கியாவும் எழிலும் அதிர்ச்சி அடைகிறார்கள். "செழியன் ஏதோ தப்பு செய்கிறான்" என பாக்கியா எழிலிடம் சொல்கிறாள்.

அடுத்த நாள் காலை பாக்கியாவும் செல்வியும் கோயிலில் இருக்கிறார்கள். அங்கே மாலினி பாக்கியா இருப்பதை பார்த்துவிட்டு செழியனுக்கு போன் செய்து "நீ உடனே இங்க வர வேண்டும், இல்லை என்றால் நான் உன்னுடைய அம்மாவிடம் எல்லாத்தையும் சொல்லிவிடுவேன்" என சொல்லி மிரட்ட செழியன் வேகவேகமாக கோயிலுக்கு வருகிறான்.

Baakiyalakshmi : சைக்கோ மாலினியின் அடுத்த மிரட்டல்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்... பாக்கியலட்சுமியில் இன்று

மாலினியும் செழியனும் தனியாக பேசிக்கொண்டு இருப்பதை செல்வி பார்த்துவிட்டு பாக்கியாவிடம் போய் சொல்கிறாள். மாலினி கிளம்பியதும் பாக்கியா செழியன் முன்னாடி போய் நின்று அதிர்ச்சி கொடுக்கிறாள். "என்னதான் நடக்குது உங்களுக்குள்ள? உண்மையை சொல்லு... நீ ஆபிசுக்கு போறதே இல்லை என எனக்கு தெரியும்" என்கிறாள் பாக்கியா. செழியன் பாக்கியாவை கட்டியணைத்து கொண்டு அழுகிறாள். "அவ என்னை மிரட்டுறா. இப்ப கூட உன்கிட்ட உண்மையை சொல்லிடுவேன் என சொல்லி தான் இங்க வர வச்சா. ஆபிஸ் வேலையா தான் முதலில் நான் அவளிடம் பழகினேன். பின்னாடி அவ மேல பரிதாபப்பட்டு அவளுடன் பேச ஆரம்பித்தேன். இப்போ சைக்கோ மாதிரி என்னை மிரட்டுறா" என செழியன் சொல்கிறான்.

ஒரு பொண்ணு தேவையில்லாம எதுக்கு மிரட்டணும். "உண்மையை சொல்லு... நீ ஏதாவது தப்பு பண்ணியா?" என பாக்கியா கேட்க "கடவுள் சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல" என செழியன் சொல்ல "நீ வீட்டுக்கு கிளம்பு நான் பாத்துக்குறேன்" என சொல்லி செழியனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget