மேலும் அறிய

Baakiyalakshmi: டைவர்ஸ் பண்ணிடுவேன் என செழியனை மிரட்டிய ஜெனி... பாக்கியலட்சுமியில் சீரியலில் இன்று நடப்பது என்ன?  

Baakiyalakshmi: *அமிர்தாவுக்காக காத்திருக்கும் கணேஷ் * செழியன் மீது சந்தேகப்படும் பாக்கியாஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் இறந்து போனதாக சொல்லப்பட்ட அமிர்தாவின் முதல் கணவன் கணேஷ் உயிருடன் நினைவு நாள் அன்று திரும்ப வந்து அவனின் அப்பா அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறான். வீட்டுக்கு வந்த கணேஷ் அமிர்தாவை வீடு முழுக்க தேடுகிறான். அங்கே எழில் நிலாவுடன் அமிர்தா இருந்த புகைப்படத்தை எடுத்து மறைத்து வைக்கிறார் கணேஷின் அப்பா.

ரூமிலும் அமிர்தா இல்லாததால் அப்பா அம்மாவிடம் அமிர்தா எங்கே என கேட்கிறான். அமிர்தா அவளுடைய அம்மா வீட்டுக்கு சென்று இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். அமிர்தாவுக்கு போன் செய்து நான் உயிருடன் வந்து இருப்பதை பற்றி சொல்லுங்கள். நான் வந்து இருப்பது தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படுவாள்.அவளை நான் உடனே பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. சீக்கிரம் வரச்சொல்லுங்கள் என சொல்கிறான். சரிப்பா சொல்றேன் என சொல்லி அழைத்து செல்கிறார் கணேஷின் அப்பா.

Baakiyalakshmi: டைவர்ஸ் பண்ணிடுவேன் என செழியனை மிரட்டிய ஜெனி... பாக்கியலட்சுமியில் சீரியலில் இன்று நடப்பது என்ன?  

மறுபக்கம் பாக்கியா ஜெனிக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறாள். செழியனை பற்றியும் கேட்கிறாள். செழியன் அங்கு வரவும் இல்லை போனும் செய்யவில்லை என ஜெனி சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். அவளுக்கு செழியன் மீது சந்தேகமும் வருகிறது.

கணேஷுக்கு அவனுடைய அம்மா அழுது கொண்டே சாப்பாடு ஊட்டுகிறார். "அழாதீங்க அம்மா நான் தான் வந்துட்டேன் இல்ல. நான் உங்களை பத்திரமா பார்த்து கொள்கிறேன்" என சொல்லி சமாதானம் செய்கிறான் அப்பாவிடம் "அமிர்தாவுக்கு நான் வந்தது பற்றி சொல்லியாச்சா. அவ எப்ப வரேன்னு சொன்னா" என கேட்கிறான். "அமிர்தா குடும்பத்தோட கோயிலுக்காக சென்னைக்கு போய் இருக்காங்களாம்" என சொல்லி தற்சமயம் சமாளிக்கிறார். "எப்போ திரும்பி வருவார்களாம். நான் வந்துட்டேன்னு சொன்னீங்களா?" என கணேஷ் கேட்க "இல்ல பா எங்களாலேயே நீ திரும்பி வந்ததை நம்ப முடியல, இப்போவே அவகிட்ட சொன்னா அவ பதட்ட படுவா அதனால இப்போ சொல்லல" என்கிறார் கணேஷின் அப்பா. "பரவாயில்ல அப்பா மூணு வருஷமா காத்துகிட்டு இருந்தேன். மூணு நாள் தானே பரவாயில்லை" என சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறான் கணேஷ். 

அங்கே அமிர்தா கணேஷை நினைத்து கவலை பட ராமமூர்த்தி வந்து அவளை சமாதானப்படுத்துகிறார். அப்பா அம்மாவுக்கு போன்  பேச சொல்கிறார். அம்மாவுக்கு போன் செய்த அமிர்தா ஒன்னும் பேசாமல் அமைதியாக இருக்க ராமமூர்த்தி அமிர்தாவிடம் இருந்து போனை வாங்கி "நீங்க கவலை படாதீங்க. எழிலை உங்களுடைய மகன் போல நினைச்சுக்கோங்க" என அறிதல் சொல்கிறார். 

Baakiyalakshmi: டைவர்ஸ் பண்ணிடுவேன் என செழியனை மிரட்டிய ஜெனி... பாக்கியலட்சுமியில் சீரியலில் இன்று நடப்பது என்ன?  

மாலினி வீட்டில் செழியன் இருக்கிறான். அப்போது செழியனுக்கு ஜெனி போன் செய்து "மம்மி உன்ன கேட்டுகிட்டே இருக்காங்க. நீ எப்போ வீட்டுக்கு வர. குழந்தை பிறந்ததுக்கு அப்பறமும் நீ இப்படியே இருந்தீனா நான் உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன். ஆன்ட்டி உனக்கு போன் பண்ணா நீ எடுக்கவே இல்லயாம். அவங்களுக்கு போன் பண்ணி பேசு" என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறாள் ஜெனி.

இனியாவின் அசைன்மென்ட்டுக்காக பாக்கியா, இனியா, செல்வி, ஈஸ்வரி என அனைவரும் காட்டுக்கு சென்றுள்ளனர். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
Embed widget