இரண்டாவது திருமணம் செய்த விஜய் டிவி பிரியங்கா! வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே திடீரென்று 2-ஆவது திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா, திடீரென்று திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர், சிறந்த தொகுப்பாளராளில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட 'தி கிரிஸ்பி கேர்ள்' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய பிரியங்கா, இதைத் தொடர்ந்து அழகிய பெண்ணே, இசை அன் பிளக்ட் என்று பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்தார்.
இதையடுத்து விஜய் டிவிக்கு வந்த பிரியங்கா சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 சீசன் 9, சூப்பர் சிங்கர் 6, 7, 8, 9, ஸ்டார்ட் மியூசிக் சீசன் 1 அண்ட் 2 என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவ்வளவு ஏன் விஜய் டியிவில் இருந்து கொண்டே கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஃபர்ஸ்ட் ரன்னர் அப் ஆக மாறினார்.
தற்போது சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா என்ற ரியாலிட்டி ஷோக்களை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளரான பிரியங்காவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளங்களே உண்டு.
11 வயதில் தந்தையை இழந்த பிரியங்கா தேஷ்பாண்டே தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலனான பிரவீன் குமாரை கரம் பிடித்தார். இவரும் விஜய் டிவியில் தான் பணியாற்றி வருகிறார். அப்போது இருவருக்கும் இடையில் உண்டான நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. ஆனால், திருமண வாழ்க்கையில் எதிர்பார்த்தபடி இல்லை. இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது பக்கெட் லிஸ்ட் பற்றி பேசியிருந்த பிரியங்கா அதில், பிக் பாஸ் போக வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. மேலும், நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தனது கணவர் தன்னை தாங்க வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் கூறியிருந்தார். இப்போதைக்கு தனது தம்பி குழந்தை தான் தனக்கு எல்லாமுமே என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிரியங்காவின் அம்மாவும் இருக்கிறார்.
பிரியங்கா திருமணம் செய்து கொண்ட நபரின் பெயர் வசி என கூறப்படுகிறது. இவரது கணவர் பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Happy married Life nga ❤️ @Priyanka2804 #priyankadeshpande #priyanka #MarriedLife pic.twitter.com/atP5vMXwVV
— Mani (@manikpc2000) April 16, 2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

