Super Singer 9 : 'நாளை நமதே'... விரைவில் தொடங்கவுள்ளது சூப்பர் சிங்கர் .... இசை மழையில் நனைய அனைவரும் தயாரா?
பல ஆண்டுகளாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. விரைவில் தொடங்கவுள்ளது சூப்பர் சிங்கர் சீசன் 9.
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான 'சூப்பர் சிங்கர்' ஷோ பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சீனியர் சீசன், ஜூனியர் சீசன் என தனித்தனியாக 8 சீசன்களை கடந்தும் இன்றும் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம்.
பலரின் வாழ்வை மாற்றிய சூப்பர் சிங்கர் மேடை :
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இன்று மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களாக வளர்த்துள்ளனர். கலைஞர்களின் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த மேடையாக சூப்பர் சிங்கர் மேடை இருந்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களின் சிலர் சத்யபிரகாஷ், திவாகர், ஸ்ரீநிஷா, நித்யஸ்ரீ, நிவாஸ், சந்தோஷ், அஜய் கிருஷ்ணா, பிரியங்கா, சாம் விஷால், ரக்ஷிதா, செந்தில், ராஜலக்ஷ்மி, ஷிவாங்கி மற்றும் பலர். சூப்பர் சிங்கர் ஸ்டார்ஸ் பலரும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். பல பிரபலமான இசையமைப்பாளர்களும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஸ்டார்களுக்கு வாய்பளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியினை மேலும் அழகாக்குபவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா.
Congratulations #Krishaang! 💐👏🎉 #SuperSingerJunior8 #GrandFinale #WinningMoment #SSJ8GrandFinaleLive pic.twitter.com/ocHpHsZ62a
— Vijay Television (@vijaytelevision) June 26, 2022
விரைவில் சூப்பர் சிங்கர் 9 ஆரம்பம்:
சில மாதங்களுக்கு முன்னர் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சி முடிவடைந்தது. ஜூனியர் சீசனில் கிரிஷாங் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் ஆடிஷன் சமீபத்தில் நடைபெற்று வந்தது. லட்சக்கணக்கானவர்கள் இந்த ஆடிஷனில் கலந்து கொண்டு தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்தி பல ரவுண்டுகளை கடந்து தேர்ந்தேகப்பட்டுள்ளார்கள். போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 9 விரைவில் தொடங்கப்பட உள்ளது.
நாளை நமதே... 💪😎
— Vijay Television (@vijaytelevision) November 9, 2022
சூப்பர் சிங்கர் Season 9 - விரைவில்.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv pic.twitter.com/B4LFcpdhmY
வெளியானது சூப்பர் சிங்கர் 9 புரோமோ :
சூப்பர் சிங்கர் சீசன் 9 புரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன், அனுராதா ஸ்ரீராம் பங்கேற்கவுள்ளனர். 'நாளை நமதே' என வெளியாகும் இந்த புரோமோவில் போட்டியாளர்கள் சிலர் நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாட்கள், நேரம் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். ஒவ்வொரு சீசன் வர வர போட்டியாளர்களின் திறமையும் மெருகேறி கொண்டே போகிறது. ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது எனும் இந்த செய்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.