பரணியை நோகடித்த ரத்னாவின் வார்த்தை.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்னா சீரியலின் இன்றை எபிசோட் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
அண்ணா சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் இசக்கியை வீட்டுக்கு அழைத்து வர பரணி கோபமான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.அதாவது, இசக்கி விஷயத்தில் கோபமாக இருக்கும் பரணியை சண்முகம் பேசி சமாதானம் செய்கிறான். பிறகு ரத்னா வீட்டிற்கு வந்து இசக்கியின் முடிவை பாராட்டுகிறாள். அதை தொடர்ந்து வீரா போலீஸ் ட்ரைனிங் முடித்து வீட்டிற்கு வருகிறாள். நீண்ட நாள்களுக்கு பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.பரணி ரத்னாவிடம் உன்னை வெங்கடேசன் வீட்டுல விட்டுட்டு வந்தது உன்னோட நல்லதுக்கு தான் என சொல்கிறாள். ரத்னா ஒரு அண்ணியா உன் வேலையை நல்ல படியா பண்ணிட்ட, என் நல்லதுக்கு நீ எதுவுமே பண்ண வேணாம் என சொல்லி விட்டு போகிறாள். இதனால் பரணி வருத்தமாகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க : RJ Balaji : சுந்தர் சி சொன்ன அந்த வார்த்தைதான் காரணம்... இந்தியன் 2 படத்தில் நடிக்காதது பற்றி ஆர் ஜே பாலாஜி
Idly Kadai: பாங்காக்கில் இட்லி கடை போடும் தனுஷ்! இந்த வாரமே கிளம்புறாரு - ரசிகர்களே