அதிரடியாக மாற்றப்பட்ட சீரியல்களின் டைம் ஸ்லாட்... ஞாயிற்றுக்கிழமை கூட ஜமாய் தான்... காரணம் இதுவா?
Serial timings changed : சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களின் டைம் ஸ்லாட் மாற்றப்பட்டுள்ளது. அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நான்கு தொடர்கள் ஞாயிற்றுகிழமையிலும் ஒளிபரப்பாக உள்ளது.
![அதிரடியாக மாற்றப்பட்ட சீரியல்களின் டைம் ஸ்லாட்... ஞாயிற்றுக்கிழமை கூட ஜமாய் தான்... காரணம் இதுவா? Sun tv serials new time slot is announced and zee tamil four popular prime time serials to be telecasted even on sunday அதிரடியாக மாற்றப்பட்ட சீரியல்களின் டைம் ஸ்லாட்... ஞாயிற்றுக்கிழமை கூட ஜமாய் தான்... காரணம் இதுவா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/c6fd21ce79d4fd84008804697a5e07ce1696682585769224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்னத்திரை ரசிகர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள். ரசிகர்களை என்றுமே பிஸியாக வைத்திருக்கும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடிக்க போட்டிபோட்டு கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தை கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.
அந்த வகையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களான சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
'சிங்க பெண்ணை' புதிய தொடர் :
சன் டிவியில் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முன்னணி வகிக்கும் எதிர்நீச்சல், இனியா, வானத்தை போல உள்ளிட்ட சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அறிமுக நாயகி மனீஷா மகேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடரான 'சிங்க பெண்ணை' சீரியல் வரும் திங்கள் முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடரான 'கண்ணான கண்ணே' சீரியலை இயக்கிய தனுஷ் தான் சிங்க பெண்ணே சீரியலையும் இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் குறும்புக்கார பெண்ணை சுற்றி நகரும் கதை களத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாக உள்ளது.
புதிய டைம் ஸ்லாட் :
இந்த புதிய சீரியலின் வருகையால் சன் டிவியில் ஏற்கனவே 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'வானத்தை போல ' சீரியல் இனிமேல் 8.30 மணிக்கும், 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'இனியா' தொடர் இனிமேல் 9 மணிக்கும், 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இனியா தொடர் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நேர மாற்றம் வரும் திங்கள் முதல் ஆரம்பமாகிறது.
ஜீ தமிழ் சீரியல் :
அதே போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நான்கு முக்கியமான முன்னணி தொடர்களான அண்ணா, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட தொடர்கள் வரும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வந்தது. வரும் வாரம் முதல் இந்த நான்கு பிரபலமான தொடர்களும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக உள்ளது என்ற தகவல் சேனல் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த வாரம் முதல் ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் சீசன் 7 இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற தொலைக்காட்சி சேனல்களில் அந்த நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் பர்பார்மன்ஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்க கூடும் என்ற கருத்து பரவலாக அடிபடுகிறது. அதனால் கூட இந்த தொடர்களின் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கலாம் என ரசிகர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)