Ethirneechal: குணசேகரனை தேடி வந்த கரிகாலன்! நந்தினியால் கண்கலங்கும் ஞானம் - எதிர்நீச்சல் இன்றைய அப்டேட்!
Ethirneechal : முதல் பத்திரிகையை ஞானத்திடம் நந்தினி கொடுக்க பூரிக்கும் ஞானம் கண்கலங்குகிறான். குணசேகரனை தேடி கரிகாலன் வர காரணம் என்ன? இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சலில் (Ethirneechal) ஈஸ்வரி தன்னுடைய தரப்பில் பேச பெண் வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வருகிறாள். "ஈஸ்வரி கேட்கும் டிமாண்ட்களை நீங்கள் கொடுத்து அவர் கேட்கும் விவாகரத்து கொடுத்தால் பிரச்சினை இல்லை. இல்லையேல் ஈஸ்வரி உங்கள் மீது வழக்கு தொடர்வார்" என வழக்கறிஞர் சொல்கிறார்.
"பணத்தை வைத்து எல்லாத்தையும் வாங்கி விடலாம் என்ற மாய உலகத்தில் இவர் இருக்கிறார். இந்த இறுக்கத்தில் இருந்து நான் வெளியே வரவேண்டும். இதை நான் சாதாரணமாக விட மாட்டேன்" என ஈஸ்வரி சபதமிடுகிறாள். ஜனனிக்கு வேலை கிடைத்த விஷயத்தை பற்றி சொல்லவும் அனைவரும் சந்தோஷம் படுகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் (மே 13 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நந்தினியின் அப்பா தாராவுக்கு மொட்டை அடித்து மொய் விருந்து விழாவிற்கான அழைப்பிதழை எடுத்துக்கொண்டு நந்தினியின் அப்பா வருகிறார். குணசேகரனிடம் சென்று கதிரின் அப்பா பெயரை போடுவது குறித்து நந்தினி அப்பா உத்தரவு கேட்க குணசேகரன் ஆணவமாக பேசுகிறார். கதிர் விசாலாட்சி அம்மாவிடம் சென்று நியாயம் கேட்க அவர் ஓவராக பேசுகிறார். ஞானத்தின் தொழிலை அவமானப்படுத்தி பேசுகிறார். "எங்க விஷயத்தில் தலையிடாமல் எங்களை வாழவிட்டாலே போதும்" என கண்டிஷனாக சொல்லிவிடுகிறாள் நந்தினி. இது தான் கடந்த எபிசோட் கதைக்களம்.
கரிகாலன் கூட்டாளியுடன் குணசேகரனை தேடி வீட்டுக்கு வருகிறான். அவனை பார்த்து ஷாக்கான அனைவரும் ஞானத்தை ஏமாற்றி பணத்தை சுருட்ட பிளான் கொடுத்தது அனைத்தும் குணசேகரன் திட்டமாக தான் இருக்கும் என பேசி கொள்கிறார்கள். இது குணசேகரன் காதுக்கு போக அவர் வீட்டில் உள்ள அனைவரையும் வர சொல்லி இது குறித்து பேசுகிறார். "நான் என்னமோ கரிகாலனை அனுப்பி உங்க பணத்தை பறிக்க சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் பேசிக்குறீங்களாமே?" என கேட்கிறார். அனைவரும் பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
நந்தினி முதல் பத்திரிகையை ஞானத்தை அழைத்து "இந்த வீட்ல அவருக்கு அடுத்து நீங்க தானே. படிச்சு சரியா இருக்கான்னு பாருங்க" என கொடுத்ததும் ஞானம் கண்கலங்கி பத்திரிகையை வாங்கி பார்க்கிறான். "அவனுக்கு கொடுக்க என்கிட்டே எதுவுமே இல்லையே. பிச்சைக்காரன் மாதிரி இருக்கானே டா" என சக்தியிடம் மனவேதனைப்பட்டு அழுகிறான் ஞானம். அவன் வருந்தி பேசுவதை கேட்டு கிச்சனில் இருந்த ரேணுகாவும் கண்கலங்குகிறாள். " காசு இல்லாட்டி என்ன? நாம எல்லாரும் ஒத்துமையா இருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும் அண்ணே. அது ஒன்னு போதும் புரியுதா" என சக்தி ஞானத்தை சமாதானம் செய்கிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.