Ethirneechal: அசிங்கப்படுத்திய குணசேகரனால் வேலையையே தூக்கி எறிந்த ஈஸ்வரி - எதிர்நீச்சலில் இன்று
Ethirneechal: ஈஸ்வரி வேலைக்கு செல்வதை தடுத்து நிறுத்த குணசேகரன் செய்த காரியம் என்ன தெரியுமா? எதிர்நீச்சல் இன்று
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் அப்பத்தாவின் மரணத்தில் இருக்கும் உண்மையை வெளிகொண்டு வருவதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் சக்தியும், ஜனனியும். அது தொடர்பாக சாருபாலாவை ஜீவானந்தம் வழக்கை விசாரிக்க அணுகுகிறார்கள்.
ஈஸ்வரி வேலைக்கு செல்வதை கடுமையாக கண்டிக்கும் குணசேகரன், ஈஸ்வரி வீடு திரும்பியதும் அவளை அனைவர் முன்னிலையிலும் நிற்க வைத்து அசிங்கப்படுத்துகிறார். எதற்கும் சற்றும் கலங்காமல் மிகவும் துணிச்சலாக என்னால் குடும்பத்தையும் பார்த்து கொள்ள முடியும் வேலைக்கும் சென்று சாதிக்க முடியும். நான் யாருக்காவதும் இந்த முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என கண்டிஷனாக சொல்லிவிடுகிறாள். ஈஸ்வரி துணிச்சலாக குணசேகரனை எதிர்த்து பேசியதை பார்த்த நந்தினியும் ரேணுகாவும் மனதார சிரித்து கொள்கிறார்கள்.
அனைவர் மத்தியிலும் அசிங்கப்பட்ட குணசேகரன் ஈஸ்வரி பேசியதையே நினைத்து நினைத்து எரிச்சல் அடைகிறார். அந்த நேரம் குணசேகரனின் வக்கீல் போன் செய்கிறார். சக்தியும், ஜனனியும் அப்பத்தாவின் வழக்கை மறுவிசாரணை செய்ய சொல்லி வழக்கு பதிவு செய்துள்ளதை பற்றி தெரிவிக்கிறார். அதை கேட்ட குணசேகரனுக்கு கோபம் மண்டைக்கு ஏறுகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் கோபமாக வீட்டில் அமர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் சக்தியும் ஜனனியும் வீட்டுக்கு வர ஞானம் சென்று அப்பத்தா வழக்கை மறுவிசாரணை செய்ய வழக்கை பதிவு செய்ததை பற்றி கேட்டு திட்டுகிறான். "அப்பத்தா விஷயத்துல உண்மையை வெளிக்கொண்டு வராமல் நான் விடமாட்டேன். கூடிய சீக்கிரம் அவனை கண்டுபிடிப்பேன்" என குணசேகரனை பார்த்து கொண்டே பேசுகிறான் சக்தி. அதை கேட்ட குணசேகரன் விழிபிதுங்கி போகிறார்.
முதல் நாள் துணிச்சலாக நான் வேலைக்கு செல்வேன் என பேசிய ஈஸ்வரி அடுத்த நாள் காலேஜுக்கு செல்ல அங்கே தம்பிகளுடன் காலேஜுக்கு வந்த குணசேகரன் ஈஸ்வரி இருக்கும் இடத்தை விசாரித்து அங்கே செல்கிறார். குணசேகரன் வந்து பிரச்சினை செய்ததால் காலேஜ் நிர்வாகம் ஈஸ்வரியை கண்டிக்கிறது. இதனால் இனியும் பிரச்சினை வேண்டாம் என "என்னை மன்னித்து விடுங்கள் என்னால் இந்த வேலையை செய்ய முடியாது" என சொல்லிவிடுகிறாள் ஈஸ்வரி.
இதை ஜனனி எவ்வளவோ தடுத்து பார்க்கிறாள். "ஒரு தடவை ரெக்வஸ்ட் செய்து பார்த்தல் ஒத்துக் கொள்வார்கள்" என ஜனனி ஈஸ்வரியிடம் கெஞ்சுகிறாள். "இல்லை ஜனனி என்னால வேலை செய்ய முடியாது" என சொல்லிவிடுகிறாள் ஈஸ்வரி. இப்படி நடந்து விட்டதே என சக்தி, ஜனனி மற்றும் ஈஸ்வரி மூவரும் வேதனையுடன் திரும்புகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.