Siragadikka Aasai Serial: சத்யாவை ஏத்திவிட்ட சிட்டி; ஸ்ருதியின் அம்மாவுக்கு கொடுத்த பரிசு: சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai :விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியல் இன்றைய (மே 18) எபிசோடில் முத்து வேற சட்டை போட்டு இருந்தது பற்றி அனைவரும் குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்கிறார்கள். எதையோ சொல்லி இருவரும் சமாளித்தாலும் அவர்கள் முகம் சரியில்லை என்பதை வைத்து மீனா வீட்டில் ஏதோ பிரச்சினை நடந்து இருக்கும் என விஜயா கணித்துவிடுகிறாள். முத்து சவாரி போயிட்டு வந்து விடுகிறேன் என சொல்லி வெளியில் கிளம்புகிறான்.
மீனாவிடம் சென்று ரோகிணி "என்ன நடந்தது?" என கேட்க மீனா "நீங்க ஏன் எங்க வீட்டு விஷயத்துல தலையிடுறீங்க?" என கேட்க "இப்படி தான் அன்னிக்கு எங்க அப்பா பணம் அனுப்புனா விஷயத்துல முத்து தலையிட்டார். எங்க அப்பா ஜெயிலுக்கு போனது பற்றி உங்க அம்மா கேட்டாங்க? மத்தவங்க விஷயத்துல தலையிட்டா எப்படி கோபம் வரும் என இப்ப புரிஞ்சுதா?" என நக்கலாக கேட்கிறாள்.
சிட்டி ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் சத்யா அவனை சென்று சந்திக்கிறான். மீனா முத்து பற்றி சிட்டி விசாரிக்கிறான். அவர்களின் திருமண நாள் பற்றியும் வீட்டில் முத்து செய்த ரகளை செய்தது பற்றியும் தெரிந்து கொண்ட சிட்டி சத்யாவை தூண்டிவிட்டு பணம் கொடுத்து மீனா வீட்டில் நடக்கும் ஃபங்ஷனுக்கு காஸ்ட்லியாக துணிகளை வாங்கி எடுத்து கொண்டு செல்ல சொல்கிறான்.
முத்து வீட்டில் பங்க்ஷனுக்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெறுகிறது. விஜயா வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். ரவியும் ஸ்ருதியும் சேர்த்து பெரிய சைஸ் கேக் ஒன்று வாங்கி வருகிறார்கள். மீனாவின் அம்மாவும் தங்கையும் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை அண்ணாமலையும் பாட்டியும் சென்று வரவேற்கிறார்கள். ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்ததும் விஜயா ஓடி சென்று வரவேற்கிறாள். அண்ணாமலை தான் ஸ்ருதியிடம் சொல்லி அவரை வர சொல்ல சொன்னதாகச் சொல்கிறார். ஸ்ருதியின் அம்மா மீனாவுக்கு பரிசாக தங்க வளையல் வாங்கி வந்து தர அதை வைத்து விஜயா மீனாவின் அம்மாவை அவமானப்படுத்தி பேசுகிறாள்.
மீனா வளையலை பார்த்து ரொம்ப அழகாக இருக்கிறது என சொல்லி அதை எடுத்து கொண்டு பொய் ஸ்ருதியின் கையில் போட்டு விடுகிறாள். "நான் என்றுமே நகைகளுக்கு ஆசைப்பட்டது கிடையாது. என்னை விட ஸ்ருதிக்கு தான் இந்த வளையல் அழகாக இருக்கிறது" என சொல்கிறாள். மீனா செய்தது பார்த்து அண்ணாமலையும், மீனா குடும்பத்தினரும் சந்தோஷப்படுகிறார்கள்.
"ஒரே அனலாக இருக்கிறது. நான் வேணும்னா ஏசி வாங்கி ஹாலில் மாட்டிவிடவா?" என ஸ்ருதியின் அம்மா சொல்ல முத்து கோபடுகிறான். அவனை தடுத்த அண்ணாமலை ஏசி எல்லாம் வேண்டாம் உங்க பொண்ணுக்கு நீங்க உங்க ஆசியை மட்டும் கொடுங்க என சொல்கிறார். முத்துவும் மீனாவும் கேக் வெட்டிக்குகிறார்கள். ஸ்ருதியின் அம்மாவுக்கு மீனா கேக் கொண்டு போய் கொடுக்க அவரோ நான் ஸ்வீட் சாப்பிடுறது இல்லை என சொல்லி விஜயாவிடம் திருப்பி கொடுத்து விட்டு நான் கிளப்புகிறேன் என சொல்ல அண்ணாமலை ரொம்ப நன்றி என வழியனுப்பி வைக்கிறார். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியல் எபிசோட் கதைக்களம்.