Watch Video: போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள்.. வைரலான வீடியோ!
கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலின் ஹீரோயின்கள் காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக கதையில் நகர்வால் ஒவ்வொரு வாரமும் ஒரு ஒரு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் வரும். அதனை கணிப்பது கடினம் என்றாலும் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்த சீரியல் எது என்பதை எளிதாக சொல்லி விடலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா,ஸ்ரீதேவா, சல்மா அருண் கல்யாணி, ப்ரீத்தா ரெட்டி, ஆர்.சுந்தரராஜன், பாக்யலட்சுமி, அனிலா ஸ்ரீகுமார் என பலரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் ஹீரோயினாக கோமதி பிரியாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோயர்ஸ்களாக உள்ளனர்.
View this post on Instagram
இவர் ஷூட்டிங் சமயத்தில் சீரியலில் நடிக்கும் சக நடிகர், நடிகைகளுடன் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சீரியலில் வரும் மீனா, ரோகினி, ஜீவா ஆகியோர் ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட காவல் நிலைய வாசலில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். 3 பேரும் “காதல்ன்னா சும்மா இல்ல” படத்தில் இடம்பெற்ற என்னம்மோ செய்தாய் நீ பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த கோமதி பிரியா, பள்ளி படிக்கும்போதே சொன்ன சின்ன சின்ன வேலைகள் எல்லாம் செய்து தன்னுடைய பொருளாதார சேவையை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து சென்னை வந்து வேலை பார்த்துக் கொண்டே மாடலிங் செய்து வாய்ப்பு தேடியுள்ளார். அப்படி பல நிராகரிப்புகளுக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சின்ன கேரக்டர் கிடைத்துள்ளது. அதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட கோமதி பிரியா கலர்ஸ் சேனலில் ஓவியா என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியல் அவருக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.