Siragadikka Aasai Serial: ஜீவாவிடம் பணத்தை வாங்க ரோகிணி ப்ளான்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ!
Siragadikka Aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

”என்னா ஆச்சி ஏன் டல்லா இருக்க” என்று ரோகிணி மனோஜிடம் கேட்கிறார்.”ரெண்டு தம்பிங்களும் டெவலபாகி போய்கிட்டே இருக்காங்க. நான் மட்டும் தான் தண்ணியில போட்ட கல்லு மாதிரி ஒரே இடத்துல நகராம இருக்கேன்’ என்று மனோஜ் சொல்கிறார். ”சொந்தமா பிஸ்னஸ் பண்ணா அதுல நான் அச்சிவ் பண்ணுவேன்ற நம்பிக்கை இருக்கு. ஆனா அதுக்கு நான் பணத்துக்கு எங்க போவேன்” என்று மனோஜ் சொல்கிறார்.
ரோகிணி ஐடியா:
”அங்கிள் கொடுத்த 27 லட்சத்தை தொலச்ச இல்ல” அந்த ஜீவா தான் இப்போ நமக்கு இருக்க ஒரே வழி. எப்படியாவது அவள கண்டு பிடிச்சி அவ எடுத்துட்டு போன பணத்தை வாங்கனும்” என்று ரோகிணி சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.
கடந்த வார எபிசோடில் ரோகிணி மற்றும் விஜயாவின் சூழ்ச்சியால் மீனாவின் பூக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி விடுகின்றனர். இதனால் மீனா அழுது கொண்டே இருந்தார். ஆனால் விஜயாவோ நமக்கு வராததையெல்லாம் பண்ணக்கூடாது என்று மீனாவை மேலும் காயப்படுத்தினார். ஆனால் முத்துவும் அண்ணாமலையும் மீனாவுக்கு தொடர்ந்து ஆறுதல் கூறினார்கள். பூக்கடையை அகற்றி விட்டதால் மீனா தொடர்ந்து வருத்தத்தில் இருக்கின்றார்.
ஸ்கூட்டி வாங்கும் முத்து:
மேலும் மீனா ஆன்லைனில் பூ வியாபாரம் செய்வதற்காக முத்து ஸ்கூட்டி ஒன்றை மீனாவுக்கு வாங்குகின்றார். மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கால் செய்து கீழே வாங்க என முத்து கூப்பிட்டார். இத்துடன் கடந்த வார எபிசோட் நிறைவடைந்து விட்டது. இந்த வார எபிசோடில் மீனாவுக்கு முத்து ஸ்கூட்டி வாங்கி கொடுப்பதால், விஜயாவும் ரோகிணியும் மேலும் கடுப்பாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஜீவா கேரக்டர் சீரியலில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கிறார்.
இதனால் சீரியலின் கதைக்களம் மேலும் களை கட்டும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. மேலும் ஜீவாவிடம் இருந்து 27 லட்சம் பணத்தை திரும்ப வாங்க ரோகிணி திட்டம் போட்டு இருக்கின்றார். இன்னும் சில மாதங்களுக்கு ஜீவாவை மையமாக கொண்டு சீரியல் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

