Sandhya Raagam: மாயாவுக்கு வில்லியாகும் ஷாரு: தனத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி: சந்தியா ராகம் இன்று!
“நாளைக்கு நோன்பு அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்” என்று சொல்ல, எல்லாரையும் இம்ப்ரெஸ் செய்ய பிளான் போடும் ஷாரு, “எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொள்கிறேன்” என்று சொல்கிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாருவை ரகுராம் வீட்டில் தங்க வைக்க பார்வதி பிளான் போட்டு சம்மதம் வாங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மாயா டைரியை கொண்டு வந்து ரகுராம் முன்பாக வைத்திருக்க, அவரும் அதை எடுக்க போன சமயத்தில் போட்டோ கீழே விழ, மாயா எடுக்கப் போகிறாள். அப்போது சீனு முந்தி கொண்டு எடுத்து விடுகிறான். உடனே மாயா “நீ போட்டோ ஒன்னும் காட்ட வேண்டாம், யாரை காதலிக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று சொல்கிறாள். இவர்கள் பேசிக் கொண்டதை பார்த்து கடுப்பாகும் ஷாரு, மாயாவை வெளியே துரத்துறேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள்.
அடுத்ததாக ரமணியம்மா “நாளைக்கு நோன்பு அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்” என்று சொல்ல, எல்லாரையும் இம்ப்ரெஸ் செய்ய பிளான் போடும் ஷாரு, “எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொள்கிறேன்” என்று சொல்கிறாள். எல்லாரும் “தனம் தான் எப்பவும் கோலம் போடுவா, அவளை மாதிரி யாராலும் போட முடியாது” என்று சொல்ல, “அதைக் கோலம் போட்டு முடித்த பிறகு சொல்லுங்க” என்று சொல்கிறாள்.
பிறகு நோன்பிற்கான ஏற்பாடுகள் நடக்க, தனம் ஒரு பக்கமும் ஷாரு ஒரு பக்கமும் கோலம் போடத் தொடங்குகின்றனர். மாயா தனத்திற்கு உதவ, ஷாரு தனியாக இருக்க, சீனு கலர் பவுடர்களைக் கொண்டு வர, அதைப் பார்த்து பார்வதியும் பத்மாவும் “உனக்கு உதவ தான் சீனு வரான்” என்று சொன்னதும் ஷாரு சந்தோசப்படுகிறாள்.
கடைசியாக சீனு இவர்களைக் கடந்து மாயா மற்றும் தனத்திற்கு உதவ, ஷாரு கடுப்பாக, மாயா தனத்திற்காக தான் இங்கே வந்தான் என்று வழக்கம் போல் தவறாக புரிந்து கொள்கிறாள். எல்லாரும் தூங்கிய பிறகு தன்னை விட தனம் கோலத்தை நன்றாக போட்டிருப்பதைப் பார்த்த ஷாரு, மோட்டார் போட்டு விட்டு கோலத்தை களையச் செய்து விடுகிறாள்.
ஷாரு எங்கேயோ சென்று வருவதை மாயா பார்த்து விட, மறுநாள் எல்லாரும் முதல் வேலையாக கோலத்தைப் பார்க்க வெளியே வருகின்றனர். முதலில் ஷாரு கோலத்தை பார்த்து எல்லாரும் பாராட்டுகின்றனர். பிறகு தனத்தின் கோலத்தை பார்க்க அது முழுவதும் தண்ணீரால் கலைந்து கிடக்க தனம் கண்கலங்கி அழுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Sherina: பிக்பாஸ் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் - கார் டிரைவரை கைது செய்தது ஏன்?