மேலும் அறிய

Navaratri Vijay TV: பாக்கியா முதல் செஃப் தாமு வரை.. விஜய் டிவி பிரபலங்களின் நவராத்திரி கொண்டாட்ட டூர்!

விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளுள் ஒன்றான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ்நாடெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது.  குறிப்பாக ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து  கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர். 

திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம். அத்துடன் செஃப்  தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.

இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் நேற்று (15 அக்டோபர் 2023) முதலாவதாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். 

 இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் அக்டோபர்16ஆம் தேதியும்,  ஈரோட்டில் அக்டோபர். 17ஆம் தேதியும், திருச்சியில் அக்.18ஆம் தேதியும்,  திருநெல்வேலியில் அக்.20ஆம் தேதியும், தஞ்சாவூரில் அக் 21ஆம் தேதியும், மதுரையில் அக்.22ஆம் தேதியும் இந்த விழா நடைபெற உள்ளது. விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது.

உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை vijaytelevisionக்கு #VijayGoluContest எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தால், போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Actor Rahman: செய்தி பார்ப்பது இல்லை.. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கு.. பாலிவுட் என்ட்ரி.. மனம் திறந்த நடிகர் ரகுமான்!

Crazy Mohan: சாக்லேட் கிருஷ்ணன், அகண்ட வாசிப்பு, அன்பு நண்பர்.. கிரேஸி மோகன் பிறந்தநாளில் கமல்ஹாசன் பதிவு!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget