மேலும் அறிய

Nadhaswaram Kaja: செல்போன் கடையில் வேலை செய்யும் “நாதஸ்வரம்” காஜா.. ரசிகர்கள் ஷாக்!

நான் 10ஆம் வகுப்பு பெயிலானதால் செல்போன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு பூபதி என்ற சர்வீஸ் செய்யும் நபருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். அவர் தான் சீரியலில் நடிக்க காரணமாக அமைந்தார்

தனக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் சிறப்பான நடிப்பேன் நாதஸ்வரம் சீரியலில் காஜாவாக நடித்த கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான மெகாத்தொடர் நாதஸ்வரம். திருமுருகன் இயக்கி நடித்த இந்த சீரியலில் மௌலி, பூவிலங்கு மோகன், மகாநதி ஷங்கர், ஷ்ருதி சண்முகபிரியா, ஸ்ருதிகா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். இந்த சீரியலில் பெரும்பாலான நபர்கள் புதுமுகங்களாக அறிமுகமாகியிருந்தனர். அதில் காஜா என்ற கேரக்டரில் நடித்த கார்த்திக்கும் ஒருவர். அதன்பின் அவர் எந்த சீரியலிலும் பெரிதாக நடிக்கவில்லை. 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் தனக்கு அந்த சீரியலில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி பேசியுள்ளார். அதில், “நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். எனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் 10ஆம் வகுப்பு பெயிலானதால் செல்போன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கிருந்த பூபதி என்ற சர்வீஸ் செய்யும் நபருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். அவர் தான் நான் சீரியல் போகவே காரணமாக அமைந்தவர். பேப்பரில் வந்த நாதஸ்வரம் சீரியலுக்கான ஆள் தேடல் விளம்பரத்தை ஒருநாள் என்னிடம் காட்டினார். நீ நடிக்க ஆசைப்பட்டு தானே இருக்கிறாய். அதனால் முயற்சி செய் என சொன்னார். எனக்கு சென்னை வந்த பிறகு தான் ஆடிஷன் என்றால் என்ன என்பதே தெரிந்தது. 

நான் ஓனரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு விட்டு வரவா  என கேட்டேன். அவர் அரை மனதுடன் போய்ட்டு வா என சொன்னார். ஒரு கல்யாண மண்டபத்தில் தான் ஆடிஷன் நடந்தது. தருமபுரியைச் சேர்ந்த நான் கோவையில் நடந்த ஆடிஷன் சென்றேன். கிட்டதட்ட 40 ஆயிரம் பேர் இருந்தார்கள். 3 ரவுண்டு அந்த ஆடிஷன் நடந்தது. நான் நடிச்சி காட்டியது அனைவருக்கும் பிடித்தது. திருமுருகன் சார் என்னிடம் சின்னதா ஒரு கதை ரெடி பண்ணிட்டு வந்து சொல் என சொன்னார். அதை கதையாக ரெடி பண்ணி சொன்னேன். 

என்னுடைய பயோ டேட்டாவை வாங்கி வைத்துக் கொண்டு சரியாக சொன்னபடி 15 நாட்களில் ஷூட்டிங்கிற்கு அழைத்தார்.  நான் அந்த சீரியலில் காஜா பையனாக நடித்தேன். திருமுருகன் சார் நம்மிடம் உரிமை எடுத்து தான் பழகுவார். சாப்பிடவில்லை என்றாலும் திட்டுவார். காரைக்குடியில் அந்த ஷூட்டிங் நடந்த நிலையில் அங்கு என்ன ஸ்பெஷல் உணவோ அதையெல்லாம் சமைத்து கொடுப்பார். என்னையெல்லாம் நன்றாக தாங்குவார். 

கொரோனா பிரச்சினையால் திருமுருகன் மறுபடியும் ஷூட்டிங் தொடங்கவில்லை.அவர் ஆரம்பித்தவுடன் மீண்டும் நடிக்க சென்று விடுவேன். அதுவரை பொருளாதார பிரச்சினையை சமாளிக்க செல்போன் கடையில் வேலை செய்கிறேன். நாதஸ்வரம்  சீரியல் விட்டு போகும்போது கல்லூரியில் இருந்து போனது போல இருந்தது” என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Selvaperunthagai : காங்கிரஸ் மாஜி தலைவரை தட்டி தூக்கும் திமுக.? ராகுலுக்கு ஷாக் கொடுக்க ரெடியாகும் ஸ்டாலின்.?
காங்கிரஸ் மாஜி தலைவரை தட்டி தூக்கும் திமுக.? ராகுலுக்கு ஷாக் கொடுக்க ரெடியாகும் ஸ்டாலின்.?
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Embed widget