மேலும் அறிய

Selvaperunthagai : காங்கிரஸ் மாஜி தலைவரை தட்டி தூக்கும் திமுக.? ராகுலுக்கு ஷாக் கொடுக்க ரெடியாகும் ஸ்டாலின்.?

Selvaperunthagai in the DMK : தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய செல்வப்பெருந்தை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் சரிவு

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ், 1952, 1957, 1962 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்தது. 1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பெரும் தோல்வி சந்தித்து ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு அடுத்தடுத்து சரிவு தான் ஏற்பட்டு வந்தது. நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும்  திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் 5 தொகுதிகளிலும் மட்டும் வெற்றி பெற்று  மோசமான தோல்வியை சந்தித்தது.

காங்கிரஸ் போட்டியும் வெற்றியும்

இதனையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2026ஆம் ஆண்டு தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுகவுடன் 11 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த இந்த கூட்டணி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவிற்கு வந்துள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி வேண்டாம் என தவெக கூட்டணியில் இணையலாம் என காங்கிரஸ் தரப்பில் குரல் எழுந்தது. ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள்  திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தனர்.

திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லையெனவும் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி போன்றோர் விமர்சித்து வந்தனர். இதனால் தேர்தலுக்கு முன்னதாகவே மாநில தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும் படி செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணியை உறுதி செய்தது காங்கிரஸ். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் விஜய்யின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்திருந்தது.

விஜய்க்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு

இதே போல காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வப்பெருந்தகையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் நடந்து கொண்டது அநாகரிமான செயல் என கூறியிருந்தார். தவெக கூட்டணியில் அமைச்சரவையில் காங்கிரஸ் நீடிக்கும் நிலையில், செல்வப்பெருந்தகை முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்ததை முதலமைச்சர் விஜய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் செல்வப்பெருந்தகை மீது புகார் தெரிவித்த நிலையில், நேற்று திடீரென செல்வப்பெருந்தகையை மாற்றி மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் மாநில தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளது. 

திமுகவில் செல்வப்பெருந்தகை.?

திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு கடந்த வருடங்களில் முழு உதவியாக இருந்த செல்வப்பெருந்தகை இருந்துள்ளார். சட்டமன்றத்திலும், பொது இடங்களிலும் திமுகவின் ஆதரவாகவே கருத்துக்களை கூறி வந்தார். இந்த நிலையில் தான் செல்வப்பெருந்தகை திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும், எனவே விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அறிவாலய வட்டார தகவலாக உள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget