மேலும் அறிய

Dr Priya: 35 வயது கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!  

Malayalam Actress Dr. Priya: மலையாள சின்னத்திரை நடிகை மற்றும் மருத்துவரான பிரியா மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். 35 வயதான பிரியா உயிரிழந்தது திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் பிரியா (Malayalam Actress Dr. Priya). ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள பிரியா அடிப்படையில் ஒரு மருத்துவர் ஆவார். 35 வயதான பிரியா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் இன்று தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். 

Dr Priya: 35 வயது கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!  
அவரின் இழப்பு மலையாளத் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் உயிர் இழந்தார். அவரின் இழப்பால் அதிர்ச்சியில் இருந்த மலையாள திரையுலகத்தினருக்கு மற்றுமொரு நடிகையை பறிகொடுத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

'கருத்தமுத்து' என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரியா தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். பிரியாவின் கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் மீட்டு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தனது ஒரே மகளை இழந்த பிரியாவின் தாயார் இந்த துக்கத்தை தாங்கமுடியாமல் தவித்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட வரது கணவர் மிகுந்த வேதனையில் இருக்கிறார். 

சமீபத்தில் தான் மாதாந்திர செக் அப்புக்காக மருத்துவமனைக்கு பிரியா சென்று வந்துள்ள நிலையில், திடீரென அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதல் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருந்த பிரியாவுக்கு இப்படி ஒரு சோகம் நடந்துள்ளதை நினைத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகத்தினர் வேதனையில் உள்ளனர். 

Dr Priya: 35 வயது கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!  

பிரியாவின் இந்த மரண செய்தியை சக நடிகரான கிஷோர் சத்யா தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வருத்தடன் தெரிவித்துள்ளார்.  மேலும் “கடவுள் ஏன் இது போன்ற ஒரு கொடூரத்தை ஒரு 35 வயதேயான கர்ப்பிணிக்கு  செய்ய வேண்டும்” என வேதனையுடன் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

கிஷோர் சத்யாவின் போஸ்ட்டில் ரசிகர்கள் பலரும் பிரியாவுக்கு இரங்கல் தெரிவித்தும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget