![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அசுரன் ஹயக்ரீவன் லட்சுமிக்கும் நாராயணருக்கும் நடக்கும் விவாகத்தை தடுத்து நிறுத்தினானா…?
அசுரன் ஹயக்ரீவன் லட்சுமிக்கும் நாராயணருக்கும் நடக்கும் விவாகத்தை தடுத்து நிறுத்தினானா…? லட்சுமிக்கும் நாராயணருக்கும் விவாகம் நடந்து முடிந்ததா…? அடுத்து என்ன….?
![அசுரன் ஹயக்ரீவன் லட்சுமிக்கும் நாராயணருக்கும் நடக்கும் விவாகத்தை தடுத்து நிறுத்தினானா…? Lakshmi Narayana Namo Namaha december 9 to december 13 episodes on colours tamil அசுரன் ஹயக்ரீவன் லட்சுமிக்கும் நாராயணருக்கும் நடக்கும் விவாகத்தை தடுத்து நிறுத்தினானா…?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/10/3164f906d95c666653a3fb689f50cac51733815469544572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லட்சுமி நாராயணா – நமோ நமஹ
Dec 9 to Dec 13 வரை
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரமாண்டமாகவும் காண்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது…. “ லட்சுமி நாராயணா – நமோ நமஹ “ ஆன்மீகப் புராண தொடர்.
இந்த வாரம்
நாராயணருக்கும் லட்சுமிக்கும் வைகுந்தத்தில் விவாகம்…விவாகத்தை தடுத்து அசுரன் ஹயக்ரீவன் லட்சுமியை அடைய முயற்சி….நராயணருக்கும் லட்சுமிக்கும் விவாகம் நடந்ததா….?
சிவன் பிரம்மா மற்றும் தேவர்கள் முன்னிலையில் அசுரன் ஹயக்ரீவன் தன் அசுரப்படைகளோடு வந்து லட்சுமி தனக்குத்தான் வேண்டும். நான்தான் விவாகம் செய்வேன் என்று பேராட்டம் செய்கிறான். நாராதர் மூலம் சேதி அறிகிறார் நாராயணர். நேராக லட்சுமியுடன் சிவனிடம் வருகிறார். அசுரன் ஹயக்ரீவனுக்கு நாராயணர் லட்சுமி ஆதியில் யார் என்று எடுத்துச் சொல்லி கர்மாவால் மட்டுமே லட்சுமியை அடைய முடியும் என்றும் புரியவைக்கிறார். மேலும் தான் மட்டுமே லட்சுமியை அடைய தகுதியானவன் என்றும் கூறுகிறார். இருப்பினும் அசுரன் கேட்பதாக இல்லை. லட்சுமியை கர்மாவால் அல்ல சூழ்ச்சியாலும் சதியாலும் அடைந்தே தீருவேன் என்று சபதம் செய்கிறான்.
அப்போது லட்சுமி அசுரன் ஹயக்ரீவனை நோக்கி நாராயணரிடம் யுத்தம் செய்ய தயாராகு என்று சொல்கிறார். ஒருகணம் சிவன் பிரம்மா நராயணர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து நாராயணரை நோக்கிய லட்சுமி “ சுதர்ஷனச்சக்கரத்தை வெளியே எடுங்கள் ‘ என்கிறார். நாராயணரும் சுதர்ஷனச்சக்கரத்தை வரவழைக்கிறார். உடனே சிவன் யுத்தத்தில் ஜெயிக்கப் போகிறவர்களுக்கு மாலை தர தயாராகிறார். லட்சுமியை அடையும் போட்டியில் ஜெயிக்கப்போவது நாராயணரா இல்லை அசுரன் ஹயக்ரீவனா என்கிற பரபரப்பு தொற்றுகிறது. சுதர்ஷனச்சக்கரத்தை எதிர்த்து தன் வலிமையான ஆயுதங்கொண்டு ஹயக்ரீவன் யுத்தம் செய்கிறான். முடிவில் தோற்றுப் போய் சோர்ந்து விழுகிறான். பழிவாங்கும் எண்ணத்துடன் அங்கிருந்து அகன்று செல்கிறான். நாராயணர் லட்சுமிக்கு மாலை சூடி மகிழ்கிறார்.
லட்சுமிக்கும் நாராயணருக்கும் விவாகம் வைகுந்ததில் துவங்குகிறது. சிவன் பிரம்மா மற்றும் தேவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். அதேவேளை தோல்வியுடன் சென்ற அசுரன் ஹயக்ரீவன் நாராயணரின் சுதர்ஷனச்சக்கரத்தை வெல்லும் ஆயுதத்தை கண்டடைய முனைகிறான். தன் சகோதர்களை பிணையக்கைதியாக வைத்து தன் தந்தை கஷ்யப்ப முனிவர் மூலமே யாகத்தில் நாராயணரின் சுதர்ஷனச்சக்கரத்தை அழிக்கும் புதிய சக்கரம் ஒன்றை தோற்றுவிக்கச் செய்கிறான்.
இன்னொருபக்கம் வைகுந்தத்தில் லட்சுமிக்கும் நாராயணருக்குமான விவாகம் சிவன் தலைமையில் விமர்சையாக மஞ்சளுடன் துவங்குகிறது. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம். மணமேடையில் நாராயணரும் லட்சுமியும் அமர்ந்திருக்கின்றனர். பிரம்மா மந்திரங்கள் ஓதத் தொடங்கிகிறார். அப்போது புதிய சக்கரத்துடன் அசுரன் வைகுந்ததின் வாசற்படிக்கு வருகிறான். வைகுந்தக் காப்பாளர்கள் ஜெய் மற்றும் விஜய் அசுரன் ஹயக்ரீவனை தடுக்கின்றனர். மேலும் “ தூய எண்ணம் இருந்தால் மட்டுமே வைகுந்தத்தினுள் நுழைய முடியும் என்கின்றனர். அசுரன் தன் வலிமையான புதிய சக்கர ஆயுதத்தை கையில் எடுக்கிறான். வைகுந்ததுக்குள் நுழைய முயற்சி செய்கிறான். அசுரன் ஹயக்ரீவன் லட்சுமிக்கும் நாராயணருக்கும் நடக்கும் விவாகத்தை தடுத்து நிறுத்தினானா…? லட்சுமிக்கும் நாராயணருக்கும் விவாகம் நடந்து முடிந்ததா…? அடுத்து என்ன….?.
இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா – நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் “ லட்சுமி நாராயணா – நமோ நமஹ “ தொடரை காணத் தவறாதீர்கள.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)