Karthigai Deepam: தீபாவுக்காக அபிராமியிடம் பேசிய கார்த்திக்.. அதிர்ச்சி கொடுத்த ஜானகி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
“இவங்க நல்லவங்க கிடையாது, ஆனால் தீபா அப்படி இல்லை. அவ ரொம்ப நல்லவள், ஏன் இப்போ இப்படி வேணாம்னு சொல்லிட்டு போனானு எனக்கு தெரியல” என்று சொல்லி கார்த்திக் கிளம்புகிறான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஐஸ்வர்யாவை சந்தித்து என்ன இந்த முறையும் உங்க பிளான் வேஸ்ட் ஆகிடுச்சா என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ஐஸ்வர்யா நட்சத்திரா கண் விழித்தது தெரிந்து ஹாஸ்பிடல் வர, அவள் "எனக்கு கார்த்தியை எப்படியாவது அடையணும், அந்த வீட்டுக்குள்ள திரும்பவும் நுழையணும்" என்று சொல்ல, ஐஸ்வர்யா இப்படியொரு பிளான் போட்டு கொடுத்தது தெரிய வருகிறது.
அடுத்ததாக கார்த்திக் அபிராமியிடம் “சாயங்காலம் கோயில் திருவிழாவில் இருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு கிளம்பும் போது, “இவங்க நல்லவங்க கிடையாது, ஆனால் தீபா அப்படி இல்லை. அவ ரொம்ப நல்லவள், ஏன் இப்போ இப்படி வேணாம்னு சொல்லிட்டு போனானு எனக்கு தெரியல” என்று சொல்லி கிளம்புகிறான்.
அதனைத் தொடர்ந்து கார்த்திக், மைதிலி ஊரை நோக்கி வந்து கொண்டிருக்க திருவிழா ஏற்பாடுகள் தடபுடலாக நடந்திருக்க தர்மலிங்கம் வீட்டில் எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். தீபாவும் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து கட்டைப்பையில் வைத்து கொண்டிருக்க ஜானகி “நீ எதுக்கு வர? நாலு பேர் நீ தான் கார்த்தியை வேணாம்னு சொல்லியாமேனு கேட்டு எங்களை அசிங்கப்படுத்தவா” என பிடித்து திட்டி விடுகிறாள்.
பிறகு கார்த்திக் மைதிலி வீட்டிற்கு வந்து விட, எல்லாரும் திருவிழாவுக்கு கிளம்ப தீபா மட்டும் வீட்டு வாசலிலேயே நிற்க, கார்த்திக் நீங்க வரலையா என்று கேட்க, தீபா நான் வீட்டை பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். கார்த்திக் நீங்களும் வாங்க என்று சொல்லி அழைத்துச் செல்கிறான். மறுபக்கம் ரூபாஸ்ரீ மற்றும் கோகிலா ஆகியோரும் திருவிழாவுக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.