Karthigai Deepam July 05: ஐஸ்வர்யா செய்த சதி... கார்த்தியை காப்பாற்றிய தாத்தா...கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் கார்த்திகை தீபத்தின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்வோம்!
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமி கொடுத்த உத்தரவால் தீபா வீட்டுக்குச் செல்ல கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க!
கார்த்திக் கிளம்பி வெளியே வரும்போது அவரைத் தடுத்து நிறுத்தும் ஐஸ்வர்யா, அவருக்கு பேதி மாத்திரை கலந்த பாலை கொடுக்கிறார். கார்த்திக் “என்ன அண்ணி புதுசா நீங்க இந்த வேலையெல்லாம் பண்றீங்க? எதுக்கு பால்” என்று கேட்க, “இல்லை... ரொம்ப தூரம் போறீங்க, அதனால் உங்களுக்கு டையார்ட்டாக ஆகும். அதனாலா தான், இதுல பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் போட்டு இருக்கேன்" என்று சொல்கிறார்.
சரியென்று கார்த்திக் அந்த பாலை குடிக்கப்போக, “அங்கு வரும் தாத்தா அவனுக்கு பால் கொடுக்க வேண்டாம், ரொம்ப தூரம் போறதுனால டிரைவிங் பண்ணும் போது தூக்கம் வந்துடும்” என்று சொல்லி, அந்த பாலை வாங்கி நான் குடித்து விடுகிறேன் என்று சொல்கிறார். ஐஸ்வர்யா கார்த்திக்கு வச்ச குறியில் தாத்தா சிக்கிட்டாரே என யோசிக்கிறார்.
பாலை குடிக்கப்போன தாத்தா, “எனக்கும் இப்போதைக்கு பால் வேண்டாம், இதை கொண்டு வந்த நீயே குடித்து விடு” என்று கொடுக்க, அதைத் தவிர்க்க முடியாமல் ஐஸ்வர்யா குடிக்க, பேதியாகத் தொடங்கி விடுகிறது. இங்கே தீபா வீட்டுக்கு வரும் கார்த்திக்கை பார்த்து எல்லாரும் சந்தோசப்பட அவனுக்கு ஆரத்தி எடுத்து பாத பூஜை செய்து வீட்டுக்குள் அழைத்து செல்கிறார் தர்மலிங்கம்.
“நீங்க வயசுல பெரியவங்க, எதுக்கு இதெல்லாம் பண்ணனும்” என்று கேட்க தர்மலிங்கம், ”இதெல்லாம் முறை, அப்படி தான் செய்யணும்” என்று சொல்லி பாத பூஜை செய்கிறார், பிறகு “தீபா நீங்க வர மாட்டீங்கனு நினைச்சேன், ஆனால் வந்துட்டீங்க, ரொம்ப சந்தோசம்” என்று நன்றி சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து “ஜானகி மாப்பிள்ளை கீழே உட்கார்ந்து சாப்பிட மாட்டார், இங்க டைனிக் டேபிள் இல்லையே” என்று சொல்ல, தர்மலிங்கம் “சரி வாங்கிட்டு வந்துடுறேன்” என்று காசை புரட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற ஆவலுடன் எபிசோட் நிறைவடைகிறது.