Ranjithame Serial: ‘சீரியல் பார்த்தால் ஒரு சவரன் தங்கம் பரிசு’ .. வித்தியாசமான அறிவிப்போடு வெளியான ப்ரோமோ..!
கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ரஞ்சிதமே சீரியலின் வித்தியாசமான ப்ரோமோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ரஞ்சிதமே சீரியலின் வித்தியாசமான ப்ரோமோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் ஒவ்வொரு சேனல்களும் வார நாட்களில் விதவிதமாக சீரியல்களையும், வார இறுதி நாட்களில் ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது. அதேசமயம் மற்ற சேனல்கள் பார்வையாளர்களை கவர விதவிதமாக அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடுவார்கள்.
மியூசிக் சேனல்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று கேட்கும் கேள்விகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, சீரியல்களில் எபிசோட்களின் நடுவே கேட்கும் கேள்விக்கு பரிசு வழங்குவது காலம் மாறினாலும் காட்சி மாறாது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் புதியாக ஒளிபரப்பாகவுள்ள சீரியல் ஒன்றும் சேர்ந்துள்ளது.
மீண்டும் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகும் கலைஞர் தொலைக்காட்சியில் சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்கள் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் கண்ணெதிரே தோன்றினால், பொன்னி c/o ராணி போன்ற புதிய சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக 'ரஞ்சிதமே' என்ற சீரியல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலில் சிவ் சதீஷ் மற்றும் மனிஷாஜித் இருவரும் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இருவருக்குமிடையேயான மோதலை வைத்து இந்த சீரியல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் மனிஷாஜித் கன்னத்தில் முத்தமிட்டால், உன்னை நினைத்து உள்ளிட்ட சீரியல்களிலும், பல படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு ரஞ்சிதமே சீரியல் திருப்புமுனையாக அமைந்தது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியல் வரும் ஜூலை 17 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலை பார்க்கும் ஒரு நபருக்கு தினமும் ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தங்கம் தொடர்பாக ஏதேனும் போட்டி நடக்க உள்ளதா என்பது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்த ப்ரோமோக்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரியல் ப்ரோமோஷனுக்காக வெளியான இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.