Pandian Stores 2: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்! மீண்டும் பாக்கியமாக என்ட்ரி கொடுக்கும் கௌதமி வேம்புநாதன்!
Gowthami Vembunathan: திருமதி செல்வம் சீரியலில் பாக்கியம் கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை கௌதமி வேம்புநாதன், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் அதே பெயரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018ம் ஆண்டு முதல் 8 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்த முதல் சீசன் 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த அக்டோபர் மாதம் தான் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் "பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" சீரியல் அதே ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வருகிறது.
"பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" சீரியல் ஆரம்பமாகி ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆனாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையும் நல்ல புள்ளிகளை பெற்று முன்னணியில் இருந்து வருகிறது.
குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடரில் மூத்த மகன் சரவணனுக்கு பெண் பார்க்கும் கதைக்களம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சரவணன் என்ற கதாபாத்திரத்தில் வி.ஜே. கதிர்வேல் கந்தசாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சரண்யா துராடி என்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை கௌதமி வேம்புநாதன் என்ட்ரி கொடுத்துள்ளர். இந்த சீரியலிலும் அவரின் கேரக்டர் பாக்கியம் தான். அதை மிகவும் பெருமிதத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பகிர்த்துள்ளார் நடிகை கௌதமி வேம்புநாதன்.
View this post on Instagram
வில்லியாகவே பெரும்பாலான சன் டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கௌதமி வேம்புநாதன். 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் மிகவும் ஃபேவரட்டான சீரியல்களில் ஒன்றான 'திருமதி செல்வம்' சீரியலில் மாமியாராக பாக்கியம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த சீரியலில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பாக்கியமாகவே அடையாளம் காணப்பட்டார். கொடுமைக்கார மாமியாராக நடித்த நடிகை கௌதமி வேம்புநாதனை நடுரோட்டில் வைத்து நீயெல்லாம் ஒரு பொம்பளையா? என்றெல்லாம் பெண் ரசிகர்கள் கேட்ட சம்பவம் எல்லாம் நடைபெற்றுள்ளன. அதுவே அவர் எந்த அளவுக்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்து இருந்தார் என்பதற்கு சான்றாகும்.
தற்போது மீண்டும் மாமியாராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கும் இந்த பாக்கியம் எப்படி இருக்க போகிறார் என்பதை பார்ப்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் விஜய் டிவி ரசிகர்கள்.