மேலும் அறிய

Super Singer 10: பிரமாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் ஃபைனல்.. டைட்டில் வென்ற ஜான் ஜெரோமுக்கு குவியும் வாழ்த்து!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்  என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10வது சீசனில் டைட்டில் வென்ற ஜான் ஜெரோமுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,  தமிழ் இசை உலகில் மிகப்பெரும்  மாற்றத்தை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள்,  சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும்  பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்  என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 9 சீசன் வெற்றிகரமாக நடந்த நிலையில் 10வது சீசனும் முடிவுக்கு வந்துள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய இந்த சீசனின் இறுதிப்போட்டி,  ஐந்து இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமான கொண்டாட்டத்துடன்  நடைபெற்றது. 

முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள்,  சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடகர்கள் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜெரோம், வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் கலந்துகொண்டனர்.  

இந்நிகழ்ச்சியில்  பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்பார்த்தபடி ஜான் ஜெரோம் டைட்டில் வென்றார். இரண்டாம் இடத்தை ஜீவிதாவும், 3வது இடத்தை வைஷ்ணவி, 4ஆம் இடத்தை ஸ்ரீநிதி, 5ஆம் இடத்தை விக்னேஷ் ஆகியோர் பெற்றனர். இதில் டைட்டில் வென்று முதலிடத்தை பிடித்த ஜான் ஜெரோமுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்  பெற்றுள்ளார். ரன்னர் அப் ஆக தேர்வான ஜீவிதா ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget