Ethir neechal July 29 Promo: குணசேகரனை பார்த்து பரிதாபம்... நக்கல் ராணி நந்தினி இங்கிலீஷில் ஆறுதல்..! இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ..!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு தமிழ்நாட்டில் பலத்த வரவேற்பு இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனக்கு வலது கை கால் செயல் இழந்ததை நினைத்து மிகுந்த மன வேதனையை மானம் மரியாதை எல்லாம் போன பிறகு இனி நான் வாழ கூடாது, அதனால் என்னை டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டு கருணை கொலை செய்து விடுங்கள் என தம்பிகளிடம் சொல்ல அவர்கள் தாங்க முடியாமல் குணசேகரனை கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.
மறுபக்கம் ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனி மூவரும் ஜீவானந்தத்தை சந்திக்க சென்றும் அவரை பார்க்க முடியாமல் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரி கெளதம் மூலம் நாம் ஜீவானந்தத்தை சந்திக்க நினைப்பதை பற்றி சொன்னால் என்ன? என ஜனனியிடம் கேட்க அவள் கோபமாக என்னால் முடியாது, அவன் ஒரு நம்பிக்கை துரோகி. அவன் மூஞ்சியில் இனிமே முழிக்க மாட்டேன் என சொல்லிவிடுகிறாள். பின்னர் ஈஸ்வரி நானே கௌதமிடன் பேசுகிறேன் என சொல்லி அவனிடம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அழைக்கிறாள். கௌதமும் வருவதாக சம்மதிக்கிறான்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதற்கான ஹிண்ட் ப்ரோமோ மூலம் வெளியாகியுள்ளது.
ஜனனி, ஈஸ்வரி மற்றும் நந்தினி மூவரும் மருத்துமனைக்கு திரும்பிய பிறகு குணசேகரனை பார்க்க செல்கிறார்கள். அங்கு அவர் மிகவும் வருத்தமாக படுத்து இருப்பதை பார்த்த நந்தினி தனது வழக்கமான நக்கல் ஸ்டைலில் கரிகாலனிடம் "என்னடா ஆச்சு?" என கேட்கிறாள். "மாமாவுக்கு ஒரு கை கால் விளங்காமல் போயிடுச்சு" என சொல்கிறான் கரிகாலன்.
இதை கேட்ட ஷாக்கான அவர்கள் " என்னடா இவ்வளவு சாதாரணமாக சொல்ற?" என நந்தினி சொல்ல "இன்னும் உசுரோட தான் இருக்காரு அது போதுமில்ல" என கூறுகிறான் கரிகாலன். இதை தெரிந்து மிகவும் பரிதாபப்பட்டு நந்தினி குணசேகரனை எட்டி எட்டி பார்க்கிறாள். அதை பார்த்த குணசேகரன் "என்ன மா நந்தினி அப்படி எட்டி எட்டி பாக்குற?" என கேட்கிறார். "ஐ ஃபீல் ரியலி சாரி ஃபார் திஸ் மாமா" என சொல்கிறாள். இதை கேட்டு காண்டான குணசேகரன் "இங்கிலீஷ் பேசுற நேரமா இது" என கேட்கிறார் அனைவரும் அப்படியே தலை குனிந்து நிற்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.
ஈஸ்வரி கௌதமை சந்தித்து பேசினாளா? ஜீவானந்தத்தை சந்திப்பது குறித்து ஏதாவது க்ளூ கிடைத்ததா? என்பதற்கான விடை இன்றைய எபிசோடில் தெரியவரும். குணசேகரனுக்கு இப்படி ஆனதை நினைத்து மிகுந்த அவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.