மேலும் அறிய

Ethir Neechal August 22 episode: கதிரை குணசேகரனுக்கு எதிராக திருப்பிய நந்தினி... மாஸ் மொமண்ட்.. விறுவிறுப்பான எதிர் நீச்சல் எபிசோட் 

* அப்பத்தாவை அடைத்து வைத்த குணசேகரன்* வீட்டுக்கு வந்த கதிரிடம் குணசேகரன் செய்ததை சொல்லி நியாயம் கேட்கும் நந்தினி* கலங்கிய வீடு படி திரும்பும் ஜனனி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய  எபிசோடில் குணசேகரன் அப்பத்தாவை மிரட்டி உருட்டி கையெழுத்து வாங்கிவிட்டு ரூமுக்குள் அடைந்து வைத்து ரூம் வாசலிலேயே சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். "அப்பத்தாவுக்கு சாப்பாடு கொடுத்து குளிக்க வைத்து டாக்டரிடம் கூட்டி போக வேண்டும்" என நந்தினி  சொல்கிறாள்.

"அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னோட புருஷன் வந்து விடுவான். அவனை நீ என் பக்கம் திருப்பிவிட யோசி போ " என்கிறார் குணசேகரன். "என்னோட புருஷனால தான் உங்க கழுத்துக்கு கத்தி வரப்போகுது" என்கிறாள் நந்தினி. அனைவரையும் அங்கு இருந்து விரட்டி விடுகிறார் குணசேகரன். 

Ethir Neechal August 22 episode: கதிரை குணசேகரனுக்கு எதிராக திருப்பிய நந்தினி... மாஸ் மொமண்ட்.. விறுவிறுப்பான எதிர் நீச்சல் எபிசோட் 
குணசேகரனுக்கு கதிர் போன் செய்கிறான். "ஒரு பெரிய தப்பு நடந்து விட்டது. ஜீவானந்தத்தை ஜன்னல் வழியா இந்த கிள்ளிவளவன சுட சொன்னா அவனோட பொண்டாட்டிய சுட்டுட்டான்" என்கிறான் கதிர். "என்னது அவனுக்கு குடும்பம் இருக்கா?" என்கிறார் குணசேகரன். "குடும்பத்தை இந்த உலகமே தெரியாமல் மறைத்து வைத்துள்ளான். ஜீவானந்தம் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என்னை இழுத்து வந்துட்டானுங்க" என்கிறான் கதிர்.

"சரி அதுவும் ஒரு வகையில் நல்லது தான். யாரும் உன்னை பார்க்கவில்லை தானே" என கேட்கிறார்  குணசேகரன். " யாரும் இல்லை ஆனா அந்த ஜனனி வந்து உள்ள பூந்து எல்லாத்தையும் சொதப்பிட்டா. அவ என்னை பார்க்கலை" என்கிறான் கதிர். "அவ ஏன் அங்க வந்தா? இங்க வந்து யார்கிட்டேயும் எதையும் சொல்லாதே. ஆடிட்டர், வக்கீலை வைத்து அப்பத்தாகிட்ட இருந்து கையெழுத்து வாங்கிட்டேன். பாதுகாப்பா வீட்டுக்கு வா" என்கிறார் குணசேகரன்.  

Ethir Neechal August 22 episode: கதிரை குணசேகரனுக்கு எதிராக திருப்பிய நந்தினி... மாஸ் மொமண்ட்.. விறுவிறுப்பான எதிர் நீச்சல் எபிசோட் 

ஜனனி காரில் வரும் வழியெல்லாம் ஜீவானந்தம் பற்றி அனைவரும் சொன்னதை நினைத்து பார்த்து கலங்குகிறாள். கயல்விழி சுட்டு கொல்லப்பட்டதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாள். 

வக்கீல் போன் செய்து ஜீவானந்தம் மீது கேஸ் போட்டதை பற்றி குணசேகரனிடம் சொல்கிறார். "ஆனா அப்பத்தா இங்க வந்து ஜீவானந்தம்  நல்லவன் என அவனுக்கு சப்போர்ட்டா பேசினா அவ்வளவு தான்" என்கிறார் வக்கீல். "எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்" என்கிறாயே குணசேகரன். 

ஆவேசப்படும் நந்தினி:

கதிர் வீடு திரும்புகிறான். கதிரிடம் "எங்க போயிட்டு வர்றீங்க. முழுசா வருவீங்களா இல்லையா என தெரியாம இரண்டு நாளா பயந்துகிட்டு இருந்தேன். உங்க அண்ணன் கையை ஒங்கிட்ட வராரு. உங்கள வேட்டை நாய்னு சொன்னாரு. அவருக்கு உங்க மேல பாசம் எல்லாம் கிடையாது. அவர் என்ன எவ்வளவு அசிங்கமா பேசுனாரு. நீங்க இருக்கும் போதே அவர் அப்படி பேசுனாருன்னா அப்போ உங்களுக்கு என்ன மரியாதை. நான் நினைச்சு இருந்தா அப்பவே போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பேன். நீங்க வந்து எனக்காக பேசுவீங்கன்னு தான் காத்துக்கிட்டு இருந்தேன்.

Ethir Neechal August 22 episode: கதிரை குணசேகரனுக்கு எதிராக திருப்பிய நந்தினி... மாஸ் மொமண்ட்.. விறுவிறுப்பான எதிர் நீச்சல் எபிசோட் 

உங்களோட கொஞ்ச வருஷம் வாழ்ந்து இருக்கேன். ஒரு ஓரத்திலாவது உறுத்தல் இல்லையா. எல்லாத்தையும் விட்டு விடலாம். நீங்க பொணமா தான் வீட்டுக்கு வருவீங்கன்னு சொன்னாரு. எனக்கு எப்படி இருந்து இருக்கும். உங்களுக்கு வலிக்குமா என தெரியல ஆனா எனக்கு வலிச்சுது. பொணமா வருவீங்கன்னு சொல்லற அளவுக்கு எங்க போனீங்கன்னு சொல்லுங்க" என கதிர் சட்டையை பிடித்து நந்தினி கேட்கிறாள். 

குணசேகரனிடம் மோதும் கதிர்:

கதிர் முறைத்து கொண்டே குணசேகரனிடம் சென்று "என்ன அண்ணன் என்ன சொன்னீங்க அவள கேக்குறேன்ல. அடிக்க போனீங்களா" என்ன கதிர் மிகவும் கோபமாக கேட்கிறான். அவன் அப்படி பேசினது அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Nissan Magnite Discount: ஆஃபர அள்ளுங்க.! லட்சக்கணக்கில் தள்ளுபடி பெறும் நிசான் மேக்னைட்; புதிய விலை, அம்சங்கள் இதோ
ஆஃபர அள்ளுங்க.! லட்சக்கணக்கில் தள்ளுபடி பெறும் நிசான் மேக்னைட்; புதிய விலை, அம்சங்கள் இதோ
Embed widget