Watch Video: சொகுசு கார் வாங்கிய CWC சுனிதா... இத்தனை லட்சங்களா... வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பிரபலமான கோமாளியாக வலம் வந்தவரான சுனிதா, விலை உயர்ந்த புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என அனைத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக பலரின் ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்; நிகழ்ச்சியாக இருந்து வரும் குக்கிங் கம் காமெடி ஷோ, ‘குக் வித் கோமாளி’. கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பாப்புலரான நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்து வருகிறார் சுனிதா கோகோய்.
வட மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சுனிதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தனது நடன திறமையை நிரூபித்து பிரபலமானார். அசத்தலாக நடனமாடக்கூடிய சுனிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான '3' படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடனத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்த சுனிதாவுக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதை நன்றாக பயன்படுத்திக் கொண்ட சுனிதா கடந்த நான்கு சீசன்களாக குக்களின் ஃபேவரட் கோமாளியாக இருந்தபடி, சேட்டை செய்யும் குறும்புத்தனமான ஒரு கோமாளியாக அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
View this post on Instagram
பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக முன்னேறியுள்ள சுனிதா தனது நீண்ட நாள் ஆசையை தற்போது நிறைவேற்றி கொண்டுள்ளார். விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
சுனிதா வாங்கியுள்ள Lexus Hybrid காரின் விலை சுமார் 60 லட்சம் இருக்குமாம். ரசிகர்களுடன் இந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்வதற்காக கார் ஓபன் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுனிதாவின் இந்த அபாரமான வளர்ச்சியை பார்த்த அவரது ரசிகர்கள் கமெண்ட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.