![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Bharathi Kannamma: படுமோசமாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல்..! வெண்பாவை கல்யாணம் செய்யப் போகும் பாரதி..! அப்செட்டில் ரசிகர்கள்..
செத்தாலும் நம்ம இரண்டு பெரும் ஒன்னாவே செத்துடலாம்னு சொல்லற கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழச்சொல்லி குடும்பத்தினர் சொன்ன நிலையில் இருவரும் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
![Bharathi Kannamma: படுமோசமாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல்..! வெண்பாவை கல்யாணம் செய்யப் போகும் பாரதி..! அப்செட்டில் ரசிகர்கள்.. bhrathi kannamma coming week promo released fans disappointed Bharathi Kannamma: படுமோசமாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல்..! வெண்பாவை கல்யாணம் செய்யப் போகும் பாரதி..! அப்செட்டில் ரசிகர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/02/494232a32a168501aa446b3e1e4a96211664712092661572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
View this post on Instagram
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மற்ற சீரியல்களை காட்டிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகல், ஒரே மாதிரியான காட்சியை மீண்டும் மீண்டும் காட்டியது என இந்த தொடர் பார்வையாளர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு பாரதி கண்ணம்மாவில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் காட்சிகள் போன்று கதை நகர்ந்தது.
View this post on Instagram
மருத்துவமனைக்குள் நுழையும் தீவிரவாதிகள் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் தங்களுக்கு உயிரோட வேண்டும் என தெரிவித்து உள்ளே இருப்பவர்களை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டுகின்றனர். பாரதியும், கண்ணம்மாவும் பிளான் போட்டு நடத்திய சம்பவத்தால் அனைவரும் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர். கடைசியாக பாரதி உடலில் வெடிகுண்டு வைத்து பிளானை நிறைவேற்ற நினைத்த தீவிரவாதிகளின் பிளானும் கண்ணம்மாவால் தவிடுபொடியானது.
இதனையடுத்து செத்தாலும் நம்ம இரண்டு பெரும் ஒன்னாவே செத்துடலாம்னு சொல்லற கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழச்சொல்லி குடும்பத்தினர் சொன்ன நிலையில், இருவரும் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனைத் தொடர்ந்து தனது கர்ப்பத்துக்கு ரோகித் காரணமான நிலையில் அந்த குழந்தைக்கு பாரதியை அப்பாவாக்க வெண்பா முயற்சிக்கிறார்.
இதற்காக திட்டம் போட்டு விஷம் குடிக்கும் அவரை பாரதி காப்பாற்றுகிறார். என்னை ஏன் காப்பாத்துன என கேட்கும் வெண்பா நான் திரும்பவும் எப்ப வேணுனாலும் சாகத்தான் போறேன். நீ கல்யாணம் பண்ணு..தாலி மட்டும் கட்டுனா போதும் என கேட்க, அதற்கு பாரதி சம்மதிக்கும் போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைக்கேட்ட ரசிகர்கள் கட்டுன பொண்டாட்டி, தனக்கு பிறந்த பிள்ளையை ஏத்துக்க மாட்டேங்குற பாரதி, தனக்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு பொண்ணோட கர்ப்பதுக்கு பொறுப்பேற்கிறாரா? என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)