Bharathi Kannamma : ஒரே வீட்டில் மீண்டும் பாரதியும் கண்ணம்மாவும்... இது எத்தனை நாளைக்கு?
இந்த வாரத்துக்கான பாரதி கண்ணம்மா ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள் விஜய் தொலைக்காட்சி. இதை பார்த்த ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ் பற்றி தெரியணுமா மேல படிங்க...
ஒரே வீட்டில் மீண்டும் பாரதியுடன் சேர்ந்து வாழப்போகும் கண்ணம்மா மற்றும் லட்சுமி. இது தான் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பாரதி கண்ணம்மா ப்ரோமோ. இது அப்படியே நடந்தா மிகவும் சந்தோஷப்படுவது விஜய் டிவி ரசிகர்கள் தான்.
CID கண்ணம்மா :
தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீள்வதற்கு மிகவும் சாமர்த்தியமாக ஒரு ஐடியாவை போலீசுக்கே ப்ளூ பிரிண்ட் போட்டு கொடுத்த கண்ணம்மா புண்ணியத்தால் அனைவரும் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர். வெடி குண்டு வைத்து பாரதியை போட்டு தள்ள நினைத்த தீவிரவாதிகளின் பிளானும் தவிடுபொடியானது. செத்தாலும் நம்ம இரண்டு பெரும் ஒன்னாவே செத்துடலாம்னு சொல்லற ஒரு அருமையான மனைவி சீரியலில் மட்டும் தான் இருப்பார்கள். அதுவும் இவள் பாரதியின் கண்ணம்மா ஆயிற்றே. இது தான் சென்ற வாரத்தின் பாரதி கண்ணம்மா சீரியல் கதை.
சௌந்தர்யா அட்வைஸ் ஒர்க் அவுட் ஆகுமா?
அனைவரும் நலமாக பாரதி வீட்டிற்கு திரும்புகிறார்கள். ஆரத்தி எடுத்து வரவேற்கும் சௌந்தர்யா எக்ஸ்ட்ரா பிட்டிங்கா இது வரைக்கும் நம்ம பட்ட துன்பத்துக்கு எல்லாம் மருந்து இனிமே நம்ம எல்லாரும் ஒண்ணா இந்த வீட்டுல இருக்குறது தான் என அடுக்குகிறார். பாரதியும் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார். சௌந்தர்யா, மகன் பாரதியிடம் இப்பவாவது கண்ணம்மா உன் மேல வைச்சிருக்கிற அன்பையும் காதலையும் புரிஞ்சிக்கோ. செத்தாலும் உன்னோடவே செத்துறேன்னு கடைசி நொடி வரைக்கும் போராடி உன்ன மீட்டிருக்கா. அம்மா சொன்னதை யோசித்துப் பார்த்த பாரதி, கண்ணம்மா கிட்ட போய் பேசறாரு. என்னோட அம்மா எனக்கு ஒரு தடவ உயிர் குடுத்தாங்க. அந்த உயிரை இப்போ நீ மீட்டு குடுத்துருக்க. இந்த நன்றியை நான் என்னிக்குமே மறக்க மாட்டேன் கண்ணம்மா என்று கூறுகிறார் பாரதி. பிறகு பாரதியோட காயத்துக்கு மருந்து போடுறாங்க கண்ணம்மா. இது தான் இந்த வாரத்துக்கான ப்ரோமோ. சௌந்தர்யா அட்வைஸ் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையானு பொறுத்து இருந்து பார்க்கலாம்.
இப்படியே இருந்துட்டா நல்லா இருக்கும்.. 😊
— Vijay Television (@vijaytelevision) September 23, 2022
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/bhtxD7V0ua
DNA டெஸ்ட் எடுப்பீங்களா பாரதி ?
இதை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? இது போல பல ப்ரோமோவா நாங்க பாத்துட்டோம் ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் வைச்சு திரும்பி பாரதி முருங்க மரத்து மேல ஏறிடுவாரு. இந்த தடவையாவது அவர் மனசு மாறி அந்த DNA டெஸ்ட் எடுத்தா நல்லா இருக்கும். இந்த சீரியல் ட்ராக்க மாத்தினாலும் நல்லா இருக்கும். சில வாரங்களாக தீவிரவாதி ட்ராக் வைச்சு ரொம்பவும் மொக்கையா போச்சு. இதுக்கு இல்லையா ஒரு எண்டு என ரசிகர்கள் அழும் அளவிற்கு செய்தார்கள்.
சீரியல் பிரியர்களின் மைண்ட் வாய்ஸ்:
பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கிறது என்றெல்லாம் ரொம்ப மாதங்களாக சொல்கிறார்கள் ஆனாலும் இன்னும் இது முடிவுக்கு வர மாதிரியே தெரியல. பார்ப்போம் டைரக்டர் இந்த சீரியல் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே கொண்டு போறாரு என்பது தான் பாரதி கண்ணம்மா சீரியல் விரும்பிகளின் மைண்ட் வாய்ஸ்.