Bharathi Kannamma: பாரதியின் ரியல் வாழ்க்கை கண்ணம்மா பத்தி தெரியுமா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோவும், தகவலும்..
பாரதியாக நடிக்கும் நடிகர் அருணின் ரியல் லைஃப் கண்ணம்மா குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற சீரியல்களில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’. சந்தர்ப்ப சூழலால் பிரிந்த கணவன் - மனைவி எவ்வாறு மீண்டும் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது.
பாரதி அருண்
2019ஆம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்தத் தொலைக்காட்சித் தொடரில் ஹீரோ பாரதியாக அருணும், ஹீரோயின் கண்ணம்மாவாக ரோஷினியும் முதலில் நடிக்கத் தொடங்கினர்.
ஆனால் ரோஷினி எதிர்பாராத காரணங்களால் சீரியலை விட்டு விலகிய நிலையில், புதிய கண்ணம்மாவாக மாடலும் நடிகையுமான வினுஷா நடிக்கத் தொடங்கினார். முதலில் வினுஜாவை கண்ணம்மாவாக ஏற்க மக்கள் மறுத்தாலும், தற்போது இத்தொடர் பழைய ஃபார்முக்கு வந்து வெற்றிகரமாக ரேட்டிங்கை தக்கவைத்துள்ள்ளது.
மேலும் படிக்க: Director Hari: சாமி படம் அப்போ பயம்.. வடிவேலுக்கு எழுதுன அந்த சீன்.. நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் ஹரி!
''கையில சாக்லெட்.. கிருத்திகா பயந்து ஓடுனாங்க'' - உதயநிதியின் காதல் கதையை போட்டு உடைத்த அன்பில்!
ரியல் லைஃப் கண்ணம்மா யார்?
இந்நிலையில் பாரதியாக நடிக்கும் நடிகர் அருணின் ரியல் லைஃப் கண்ணம்மா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ’ராஜா ராணி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ச்சனாவும் நடிகர் அருண்உம் காதலிப்பதாக சீரியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
மேலும் இதுவரை இந்த ஜோடி வெளிப்படையாக தங்கள் காதல் குறித்து தெரிவிக்கவில்லை என்றும், விரைவில் இது குறித்து இவர்கள் அறிவிப்பார்கள் என்றும் தற்போது செய்தி பரவி வருகிறது.
மேலும், அருணும் அர்ச்சனாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது. இந்நிலையில் விஜய் டிவி புகழ் சின்னத்திரை ஜோடியான சஞ்சீவ் - ஆல்யா மானஸா வரிசையில் இவர்களும் மக்களிடம் ரீச் ஆவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Watch Video : உழைச்சுக்கிட்டே இருப்பேன்.. மீண்டும் ஷூட்டிங் புறப்பட்ட சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்