Bhagyalakshmi Serial: ’அவசரப்பட்டுட்டியே ராதிகா’ ... ராமமூர்த்தி சொன்ன அட்வைஸால் அதிர்ச்சியடைந்த கோபி..!
Bhagyalakshmi Serial Written Update Today (05.12.2022): பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை திருமணம் செய்யக்கூடாது என ஈஸ்வரி சத்தியம் வாங்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை திருமணம் செய்யக்கூடாது என ஈஸ்வரி சத்தியம் வாங்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.
அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
அதிர்ச்சியில் பாக்யா
எழிலும், பாக்யாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வரும் ஜெனி, அமிர்தாவுடனான பிரச்சனை குறித்து கேட்கிறார். உங்களுக்கு எப்படி தெரியும் என பாக்யா கேட்கிறார். அதற்கு எழில் நடவடிக்கைகளை வைத்து கேட்டேன் என சொல்லிவிட்டு பாட்டிக்கு சந்தேகம் வந்து விட்டதாக எழிலுக்கு அதிர்ச்சியளிக்கிறார். எப்படி தெரியும் என முழிக்கையில் செழியன் தான் அனைத்தையும் சொன்னாதாக ஜெனி கூறுகிறார். ஆனால் நான் சமாளித்து விட்டேன் என சொன்னாலும் பாக்யாவும், எழிலும் என்ன நடக்கப்போகிறதோ என பதறுகின்றனர்.
ராமமூர்த்தி கொடுத்த அட்வைஸ்
கோபி வீட்டில் உணவு சமைத்து விட்டு ராதிகா அனைவரையும் அழைக்கிறார். அதற்கு முன்னால் அனைவரும் தன்னை பாராட்டுவது போல கனவு காண்கிறார்.வீடியோ பார்த்து எல்லோரையும் அசர வைக்கும் அளவுக்கு சாப்பாடு செய்யணும் என நினைத்து செய்த அவர் உணவை யாருமே பாராட்டாமல் இருக்கிறார்கள். உச்சக்கட்டமாக எந்த ஹோட்டல்ல ஆர்டர் பண்ண சாப்பாடு நல்லா இருக்கு என கோபி சொல்ல ராதிகா வருத்தமடைகிறார். அவர் சாப்பாடு பற்றி திரும்ப திரும்ப கேட்க, ராதிகா மனநிலையை ராமமூர்த்தி புரிந்து கொள்கிறார். பின்னர் 25 வருஷமா அங்க ஒருத்தி விதவிதமா சமைச்சி போட்டா..அவளையே பாராட்டல..அது உனக்கு கிடைக்கும்ன்னு எதிர்பார்க்காத.. என சொல்லிவிட்டு இப்படி அவசரப்பட்டுட்டியேமா என ராமமூர்த்தி தெரிவிக்கிறார்.
இதனைக் கேட்டு யோசிக்கும் ராதிகா தான் கஷ்டப்பட்டு சமைச்சா நீங்க இப்படி சொல்லிட்டீங்க என தன் சோகத்தை கோபியிடம் சொல்கிறார். இதைக் கேட்டு அதிரும் கோபி, ராதிகாவை சமாதானப்படுத்த கைகளில் முத்தமிடுகிறார். இதைப் பார்க்கும் இனியா டென்ஷனாகிறார்.
சத்தியம் வாங்கிய ஈஸ்வரி
வீட்டில் எழில், ஜெனி, பாக்யா அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வரும் ஈஸ்வரி எழிலிடம் செழியன் சொன்னதைப் பற்றி கேட்கிறார். இதனால் என்ன பதில் சொல்ல என முழிக்கும் அவரிடம் அமிர்தாவுடன் நீ நட்பா இரு. அது பிரச்சனையில்லை. ஆனால் காதல், கல்யாணம் பண்ணக்கூடாது என எழில் கையை பிடித்து சத்தியம் பெற்றுக் கொள்கிறார். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.