மேலும் அறிய

Bhagyalakshmi Serial: இனியாவை தேடி கோபி வீட்டுக்கு சென்ற பாக்யா..காத்திருக்குதா அதிர்ச்சி? இன்றைய அப்டேட் இதோ..!

Bhagyalakshmi Serial Written Update Today (29.11.2022):இனியா சென்ற பள்ளி பேருந்து விபத்து நடந்ததை அறிந்த கோபியும் பாக்யாவும் பள்ளிக்கு விரைந்து செல்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை தேடி கோபி வீட்டுக்கு பாக்யா செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.

இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

அதிர்ச்சியடைந்த கோபி 

இனியா சென்ற பள்ளி பேருந்து விபத்து நடந்ததை அறிந்த கோபியும் பாக்யாவும் பள்ளிக்கு விரைந்து செல்கின்றனர். அங்கு கோபி ஆசிரியரிடம் இனியாவுக்கு அடி ஏதும் பட்டதா என்பதை விசாரித்துக் கொண்டிருக்கும் போது பாக்யா எழிலுடன் உள்ளே வருகிறார். 

பின்னர் கோபி மகளைத் தேடி பள்ளி வகுப்பறைகளில் சென்று தேடுகிறார். அப்போது ஒரு வகுப்பறையில் டாக்டர் பிக்னிக் சென்ற மாணவிகளுக்கு செக்கப் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஜன்னல் வழியாக பார்க்கும்போது உள்ளே ஓரிடத்தில் இனியா அழுது கொண்டிருக்கிறார். பின்னர் இனியாவை அழைத்து உனக்கு எதுவும் அடிபட்டு விட்டதா உண்மையை சொல். நான் ஸ்கூலில் இருந்து போன் வந்துவுடன் பதறிப் போய் விட்டேன் என கோபி சொல்கிறார்.  இனியாவும் நானும் விபத்து நடந்த உடன் பயந்துவிட்டேன் ஆனால் எனக்கு அடி எதுவும் படவில்லை என தெரிவிக்கிறார். 

அவர்கள் இருவரும் பேசுவதை பார்க்கும் ஆசிரியர் செக்கப் முடிந்து நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என சொல்லி கோபியை வெளியே அனுப்புகின்றனர். அங்கிருந்து வரும் கோபி பாக்கியாவும் எழிலும் இருப்பதை பார்த்து ஷாக்காகிறார். இவர்கள் இனியாவை பார்த்து விட்டால் ஏதேனும் டிராமா செய்து அவளை கூட்டி சென்று விடுவார்கள் என்ற பயத்தில் மீண்டும் வேகமாக உள்ளே செல்கிறார். 

கடுப்பான பாக்யா 

கோபி போன்ற ஒரு நபர் போவதை பார்க்கும் பாக்யா எழிலிடம் இது பற்றி தெரிவிக்கிறார்.  அப்போது மாணவிகள் ஓரிடத்தில் இருந்து வெளியே வருவதை பார்த்த பாக்யா அங்கு தான் இனியா இருப்பார் என  கணித்து அங்கு சென்று பார்க்கிறார். ஆனால் அங்கு இனியா இல்லை. அதற்குள் கோபி இனியாவை அழைத்து சென்று விடுவதை ஆசிரியர் சொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் பாக்யா என் மகளை கூட பார்க்காமல் அழைத்து சென்று விட்டாரே என எண்ணி புலம்புகிறார். 

பின்னர் எழிலிடம் வருத்தப்பட்டுக் கொண்டே பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும் இனியாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என கோபி வீட்டுக்கு பாக்யா செல்கிறார். அங்கு ராமமூர்த்தி ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க மாமா என பாக்யா அழைக்கிறார்.  அவரைக் கண்டு ராமமூர்த்தி திடுக்கிட்டு போகிறார். மேலும், இனியா நான் அம்மா வந்து இருக்கிறேன்...நான் உன்ன பாக்கணும் என்ன பாக்யா கத்த ரூமுக்குள் கோபியுடன் அமர்ந்திருக்கும் இனியா வெளியே செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். இப்படியான காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget