Bhagyalakshmi Serial: ’நினைச்சது நடந்துடுச்சி’...கோபி வீட்டில் சண்டை ஆரம்பம்...மல்லுகட்டிய ராதிகா - இனியா...!
Bhagyalakshmi Serial Written Update Today (24.11.2022): பாக்யா வாக்கிங் சென்று கொண்டிருந்த நிலையில் அவரிடம் கோபியை பற்றி பேசி பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் கடுப்பேத்துகின்றார்.
![Bhagyalakshmi Serial: ’நினைச்சது நடந்துடுச்சி’...கோபி வீட்டில் சண்டை ஆரம்பம்...மல்லுகட்டிய ராதிகா - இனியா...! bhagyalakshmi serial written update today 24th november 2022 episode 669 Iniya gets into an argument with Radhika Bhagyalakshmi Serial: ’நினைச்சது நடந்துடுச்சி’...கோபி வீட்டில் சண்டை ஆரம்பம்...மல்லுகட்டிய ராதிகா - இனியா...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/4517a996d2c0c5b2439cb8e9902cdba61669268847769572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா - இனியா இடையே பிரச்சனை வெடிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கடுப்பான பாக்யா
பாக்யா வாக்கிங் சென்று கொண்டிருந்த நிலையில் அவரிடம் கோபியை பற்றி பேசி பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் கடுப்பேத்துகின்றார். வீட்டுக்கு எதிரே கோபி வந்துட்டார், இனியாவும் அங்க போய்ட்டா எப்படி இப்படி தைரியமா இருக்கீங்க. நானா இருந்தா தாங்கியிருக்கவே மாட்டேன் என அப்பெண் சொல்ல, உடனே பாக்யா நீங்களும் நானும் சமமானவங்க இல்ல என பேசி விட்டு செல்கிறார். பின்னர் பாக்யாவுடன் செல்வி வாக்கிங் செல்ல , எதிரே கோபி வருகிறார். அவரைப் பற்றி பாக்யாவிடம் ஏரியா செகரட்டரி நக்கலாக பேசுகிறார். கோபியும் செகரட்டரியை பார்த்தவுடன் நின்று பேச இருவரையும் கலாய்த்து விட்டு பாக்யா அங்கிருந்து செல்கிறார்.
சோகத்தில் எழில்
எழில் முகம் வாடி போயிருப்பதைக் கண்டு பாக்யா என்னவென்று விசாரிக்கிறார். தான் அம்ரிதா வீட்டுக்கு போன கதையை சொல்ல, நானும் அவகிட்ட பேசுனேன். அவளுக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு என சொல்லிக்கொண்டே அம்ரிதாவுக்கு போன் செய்கிறார். சுவிட்ச் ஆஃப் என வருகிறது. இதனையடுத்து எழிலுக்கு பாக்யா ஆறுதல் தெரிவிக்கிறார்.
சண்டைக்கு போன இனியா
கோபி வீட்டில் மயூ ஹெல்ப் கேட்க, இனியா மறுக்கிறார். ஆனால் ராமமூர்த்தி குழந்தைகள் என்ன தப்பு பண்ணாங்க என சொல்லி ஹெல்ப் பண்ண சொல்கிறார். இனியாவும் அதை செய்துக் கொண்டிருக்கும் வேளையில் கோபி வருகிறார். அவரை டாடி என இனியா பின்னாலேயே மயூவும் டாடி என சொல்கிறார். இதனால் இனியா கடுப்பாகிறார். பின்னர் ராதிகா வந்து என்ன சாப்பாடு வேண்டும் என கேட்க, எனக்கு தெரியாது என இனியா கூறுகிறார். இதனைத் தொடர்ந்து இனியா, மயூ இருவரும் ஸ்கூலுக்கு ரெடியாகி சாப்பிட அமருகின்றனர்.
அப்போது இனியா தனக்கு வைக்கப்பட்டிருக்கும் ஹெல்த் மிக்ஸ் கண்டு அதிர்ச்சியடைகிறார். என்ன இது , இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன் என தெரிவிக்க கோபி ராதிகாவிடம் குழந்தைகளுக்கு என்ன வேணுமோ அதை செய்ய வேண்டிதானே என சத்தம் போடுகிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா நான் கேட்டதற்கு பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம். நான் என்ன பேயா..என்கிட்ட பேசுனா என்ன ஆகிரும் என கேட்கிறார்.
உடனே இனியா நீங்க யாரு?..உங்ககிட்ட நான் ஏன் பேசணும் என எகிற, இந்த வயசுல இப்படியான ஆட்டிடியூட் காட்டுறது தப்பு என பதிலுக்கு ராதிகா மல்லுக்கு செல்கிறார்.மேலும் ராதிகா இனியாவை shut up என சொல்ல, பதிலுக்கு இனியாவும் சொல்ல சண்டை வெடிக்கிறது. இதையெல்லாம் ராமமூர்த்தி ஹாலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)