Bhagyalakshmi Serial: வில்லியாக மாறிய ராதிகா... பாக்யாவை பழிவாங்க கிடைத்த வாய்ப்பு.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
Bhagyalakshmi Serial Written Update Today (15.12.2022): பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை பழிவாங்க ராதிகா முயற்சி எடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை பழிவாங்க ராதிகா முயற்சி எடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.
இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
View this post on Instagram
ராதிகா செய்த சதி
பாக்யாவுக்கு திருமண மண்டப ஓனர் ராஜசேகர் உதவியுடன் லோன் கிடைக்கிறது. இதனை அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி மகிழ்கிறார். ஆனால் பேங்க் வட்டியோட இது அதிகம் என சொல்ல ஈஸ்வரி அதிருப்தியடைகிறார். ஆனால் தன்னால் இந்த கடனை அடைக்க முடியும் என பாக்யா உறுதியாக கூறுகிறார். இதனைத் தொடர்ந்து எழிலும், பாக்யாவும் ஐடி கம்பெனி ஓனரை சந்தித்து கேண்டீன் ஆர்டர் எடுக்க செலுத்த வேண்டிய ரூ.7 லட்சத்துக்கான காசோலையை தருகிறார்கள். அப்போது அவர்களை அதே கம்பெனியில் வேலை பார்க்கும் ராதிகா பார்த்து விடுகிறார்.
இதனையடுத்து நேராக ஓனரிடம் சென்று அந்த பாக்யா கேட்டரிங் ஆர்டர் பற்றி விசாரித்தேன். அவர்கள் 20,30 பேருக்கு தான் அதிகப்பட்சம் சமைச்சி கொடுத்துருக்காங்க. ஏற்கனவே நமக்கு சாப்பாடு கொடுக்குற ஹோட்டல் பத்தி நல்ல அபிப்பிராயம் தான் இருக்கு. இவங்களுக்கு ஆர்டர் கொடுத்து சாப்பாடுல எதுவும் பிரச்சினைன்னா நாளைக்கு என்னதான் பிரஷர் பண்ணுவாங்க. அதனால இவங்களுக்கு கேண்டீன் ஆர்டர் கொடுக்காதீங்க என கொளுத்திப் போடுகிறார்.
மிரட்டிய இனியா
வீட்டுக்கு வரும் ராதிகா, மயூ மற்றும் இனியா போன் உபயோகிப்பதை கண்டித்து படிக்குமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் இனியா அதைப் பற்றி கண்டுக் கொள்ளாமல் இருக்க ராதிகா டென்ஷனாகிறார். உங்க அம்மா இப்படித்தான் வளர்த்துருக்காங்களா என சொல்ல, பதிலுக்கு எங்க அம்மாவை பத்தி பேச நீங்க யாரு என எகிறுகிறார். இதனால் வாக்குவாதம் முற்றுகிறது. ஒருகட்டத்தில் ராதிகா இனியாவை அடிக்க கை ஓங்குகிறார். இதனை தடுக்கும் இனியா, அப்பாவே என்னை அடிச்சது இல்ல..நீங்க யாரு என எச்சரித்து விட்டு செல்கிறார்.
இதனையடுத்து பாக்யா வீட்டில் கேண்டீன் ஆர்டருக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என அனைவரும் கலந்து பேசும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

