Baakiyalakshmi: மாலினியை பிரேக் அப் செய்த செழியன்... கோபியை சந்தேகப்படும் ராதிகா... பாக்கியலட்சுமி இன்று!
Baakiyalakshmi Oct 10: மாலினிக்கு குட் பை சொல்லிவிட்டான் செழியன். அமிர்தாவை தேடி பாக்கியா வீட்டுக்கே வந்த கணேஷ் எழிலுடன் அமிர்தா இருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் செழியன் மாலினியை ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசிக்கொண்டு இருக்கிறான். மாலினி நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? எனக் கேட்டதும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செழியனை "இந்த உறவுக்கு அர்த்தமே இல்லை. இது நீடிக்கவும் நீடிக்காது. எனக்கு உன் மேல எந்த தப்பான இன்டன்ஷெனும் இருந்ததே இல்லை.
இதுவரையில் நடந்த அனைத்து விஷயங்களுக்கும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் இந்த ப்ராஜெக்ட் விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன். இனி நாம் சந்திக்கவோ பேசவோ வேண்டாம்" என சொல்லி குட் பை சொல்கிறான். மாலினி "நீ எனக்கு வேணும். என்னோட வாழ்க்கை முழுசும் நீ எனக்கு வேணும். நான் உன்னை இனிமே தொந்தரவு செய்ய மாட்டேன்" என எவ்வளவு கெஞ்சி பார்த்தும் செழியன் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறான் செழியன்.
பாக்கியாவை தேடிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள் அவளிடம் வேலை செய்த பெண்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்த விஷயத்தை பற்றி விசாரித்துவிட்டு “கேட்டரிங் ஆர்டர் புதுசா? ஏதாவது வந்து இருக்கா?” என கேட்கிறார்கள். வேலை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு என சொல்கிறார்கள். பணத்தை உடனடியாக கொடுக்க சொல்லி குடைச்சல் கொடுக்கிறார்கள். இன்னும் இரண்டே நாளில் எங்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் என சொல்லிக் கத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இதை எப்படி சமாளிப்பது எனக் குழப்பத்தில் இருக்கிறாள் பாக்கியா.
கோபி வீட்டில் மயூவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்கிறார். அப்போது பேங்கில் இருந்து கோபியை சந்தித்து பணத்தை வசூல் செய்துவிட்டு செல்வதற்காக வருகிறார்கள். அவர்களை பார்த்த அதிர்ச்சியில் கோபி தனியாக அழைத்து செல்கிறார். “ஆஃபீஸூக்கு வந்தோம் அங்கே உங்களைப் பார்க்க முடியவில்லை. அதனால் தான் நாங்க வீட்டுக்கு வந்து இருக்கோம். பணத்தை எப்படியாவது சீக்கிரம் கட்டி விடுவேன்” என சொல்லி சமாளித்து அனுப்பி விடுகிறார். இதைப் பார்த்து விட்ட ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகம் வருகிறது.
கணேஷ் - அமிர்தாவை மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டு இருக்கிறான். ஈஸ்வரி ஃபுட்ஸ் விலாசத்தை தேடி கொண்டு வருகிறான். அப்போது தான் அமிர்தா நிலவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள். கணேஷூம் பாக்கியாவின் வீட்டை தேடி கண்டுபிடித்து விடுகிறான். வீட்டுக்குள் சென்றதும் அங்கே எழில், நிலா மற்றும் அமிர்தா இருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் கண்கலங்கி அழுகிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.