Baakiyalakshmi Serial: திருமண மண்டபத்திற்குள் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி...களைகட்டும் பாக்யலட்சுமி சீரியல்..!
ராதிகா வீட்டுக்கு செல்லும் ராமமூர்த்தி அங்கு வீடு பூட்டியிருப்பதை கண்டு குழப்பமடைகிறார். பின்னர் எதிர்வீட்டில் இருப்பவரிடம் கேட்கும் போது, அப்பெண் ராதிகாவுக்கு நாளைக்கு கல்யாணம் என்பதை தெரிவிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா திருமண நிகழ்ச்சி நடக்கப்போகும் நிலையில் பாக்யா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
மண்டபத்திற்குள் நடக்கும் கலாட்டா
ஜெனியை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி விட்டு மண்டப வாசலில் இருக்கு பிளக்ஸ் பேனரில் ஆங்கிலத்தில் இருக்கும் கோபிநாத் - ராதிகா பெயரை செல்வி எழுத்துக்கூட்டி படிக்கிறார். கோபிநாத் பெயரை படித்துவிட்டு நீயாவது ஒழுங்கா இரு என சொல்லிக்கொண்டே ராதிகா பெயரை படிக்க முயற்சிக்கும்போது மண்டப மேனேஜர் வந்து அவரை சத்தம் போட்டு உள்ளே சென்று சமையல் வேலை செய்ய சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி சோகமாக அமர்ந்திருக்க இனியா, எழில், செழியன் 3 பேரும் பசிப்பதாக சொல்கின்றனர். ஆனால் சாப்பிட கூட்டு, பொரியல் எதும் இல்லாத நிலையில் அம்மா இல்லாத வீடு எப்படி இருக்குன்னு பாருங்க என எழில் வழக்கம்போல பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனைக் கேட்டு கடுப்பாகும் செழியன் தாத்தா எங்கே ஈஸ்வரியிடம் கேள்வியெழுப்ப, அவர் தனது நண்பரோட பொண்ணு கல்யாணத்துக்கு போனதாக எழில் கூறுகிறார். தனியாவா போனாரு, என் அப்படி அனுப்புனீங்க என செழியன் கேட்க, என்னமோ உனக்கு தான் அக்கறை இருக்க மாதிரி என எழில் வாக்குவாதம் செய்கிறார்.
பாக்யாவால் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி
மண்டபத்திற்கு கோபி ராதிகா, மயூ, என அவர்கள் குடும்பம் சூழ வருகிறார். அப்போது சமையல் பொருட்களில் அப்பளத்தை காணவில்லை என மளிகை கடைக்கு பாக்யா போன் செய்ய மண்டப பால்கனிக்கு வருகிறார். அவர் போனில் பேசும் குரல் கோபிக்கு கேட்பதை தொடர்ந்து அவர் முகம் பயத்தால் மிரண்டு போகிறது. பாக்யா இங்கே வந்துட்டாளா என நினைப்பதற்குள் சந்துரு அது சமையல் கேட்டரிங் எடுத்தவர் என சொல்கிறார். இதனால் கோபி சற்று நிம்மதியடைகிறார்.
களைக்கட்டும் திருமண நிகழ்ச்சி
ராதிகா வீட்டுக்கு செல்லும் ராமமூர்த்தி அங்கு வீடு பூட்டியிருப்பதை கண்டு குழப்பமடைகிறார். பின்னர் எதிர்வீட்டில் இருப்பவரிடம் கேட்கும் போது, அப்பெண் ராதிகாவுக்கு நாளைக்கு கல்யாணம் என்பதை தெரிவிக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் மூர்த்தி எங்கே என கேட்க, தனக்கு தெரியாது. ஆனால் போரூரில் நிறைய மண்டபம் இருக்கும் ஒரு வளாகத்தில் தான் கல்யாணம் நடக்கப் போவதாக அக்கம் பக்கத்துல பேசிகிட்டாங்க என தெரிவிக்க, எப்படியும் இந்த கல்யாணத்தை நடக்கவிடக் கூடாது என சொல்லிவிட்டு ராமமூர்த்தி மண்டபத்தை நோக்கி செல்கிறார். அதேசமயம் கோபி, பாக்யா இருவரும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ரெடியாகிறார்கள். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.