Baakiyalakshmi Serial: பாக்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் கோபி..திருமணத்தை தடுத்து நிறுத்த பிளான் போடும் ராமமூர்த்தி..!
கோபியின் கல்யாணம் என தெரியாமல் அதற்கான சமையல் ஆர்டரை பெற்றிருக்கும் பாக்யாவிடம் இதெல்லாம் இப்ப தேவைதானா என ஈஸ்வரி திட்டுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுடன் நடக்கப்போகும் கல்யாணம் குறித்து கோபியின் அப்பா ராம மூர்த்தியிடம், அம்மா ஈஸ்வரி சொல்லும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
மறைமுகமாக சொல்லும் ஈஸ்வரி
கோபி ராதிகாவுடனான திருமணம் குறித்து சொன்னதும், எப்படி இந்த திருமணத்தை நடத்துறன்னு பார்க்கலாம் என சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் ஈஸ்வரி, பாக்யாவிடம் இதுகுறித்து மறைமுகமாக தெரிவிக்கிறார். கோபியின் கல்யாணம் என தெரியாமல் அதற்கான சமையல் ஆர்டரை பெற்றிருக்கும் பாக்யாவிடம் இதெல்லாம் இப்ப தேவைதானா என திட்டுகிறார். ஏன் இப்படி பண்ற என மூர்த்தி கேட்க, அப்புறம் என்ன என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.
ஜாலியாக ரெடியாகும் கோபி
ராதிகாவும் கோபியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கோவிலில் நடந்த விஷயம் பற்றி பேசுகிறார்கள். அப்போது அங்கு வரும் ராதிகா அண்ணன் சந்துரு, கல்யாணத்துக்கு என்னென்ன சாப்பாடு வேண்டும் என கேட்கிறார். இந்த பட்டியலில் கேரட் அல்வா மற்றும் காஜூ கட்லி தான் பிடிக்கும் என கோபி சொல்கிறார். இந்த விஷயம் இனியா, ஜெனி உடன் இருக்கையில் சமையல் காண்டிராக்டரான பாக்யாவுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. மெனுவை கேட்டதும் கேரட் அல்வா மற்றும் காஜூ கட்லி அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் என சந்தோஷப்பட்டு விட்டு பாக்யாவை பார்த்து முறைப்புடன் இனியா போகிறார்.
கனவு காணும் பாக்யா
இதே எண்ணத்தோடு தூங்க செல்லும் பாக்யா கனவில் கோபி வந்து தனக்கு இதை செய்து கொடுக்குமாறு சொல்ல அவர் ஆசையோடு சமைக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. பின்னர் அதனை நினைத்து அழுகிறார்.
மூர்த்தியிடம் உண்மையை சொன்ன ஈஸ்வரி
ஈஸ்வரி யோசனையும் அமர்ந்திருப்பதை பார்த்து மூர்த்தி என்னவென்று விசாரிக்கிறார். முதலில் சொல்லாமல் மழுப்பும் ஈஸ்வரி, பின்னர் கோபியை பார்த்த கதையையும், அவர் ராதிகாவை திருமணம் செய்யவுள்ளதையும் கூட மூர்த்தி அதிர்ச்சியடைகிறார். இந்த கல்யாணத்தை நான் நடக்க விடமாட்டேன் என சபதம் எடுக்கும் மூர்த்தி, ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.