Baakiyalakshmi Serial: குற்ற உணர்ச்சியில் கோபி...சோகத்தில் குடும்பம்! கடுப்பான ரசிகர்கள்! பாக்கியலட்சுமி பரிதாபங்கள்!
எனக்கு தனி ரூம் கேட்டு எத்தனையோ நாள் அம்மா இந்த ரூமுக்கு வருவாங்க..அப்ப அப்படி திட்டுவேன் என ஜெனியிடம் இனியா கூறுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தினர் வருத்தம் அடைந்ததை கண்டு கோபி குற்ற உணர்ச்சியில் பரிதவிக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
என்ன தான் கோவப்பட்டாலும் அம்மாவின் பதில் அன்பு மட்டுமே..❤️
— Vijay Television (@vijaytelevision) July 19, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/CWf5bmMmBB
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கோபியின் அப்பா மூர்த்தி பேரன் எழிலிடம் போன் செய்து பாக்யாவின் நிலை பற்றி கேட்கிறார். மேலும் ராதிகா-கோபி விஷயம் தெரிந்த பிறகு பாக்யா உறுதியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறுகிறார். அதன்பின் கோபியின் மகள் இனியாவிடம் மூத்த மருமகள் ஜெனி, தூங்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி நாளைக்கு ஸ்கூல் போகணும்ல..அதனால தூங்குமாறு சொல்கிறார். ஆனால் அம்மா இல்லாமல் தான் ஸ்கூல் போக மாட்டேன் என இனியா தெரிவிக்கிறார். அதேசமயம் எனக்கு தனி ரூம் கேட்டு எத்தனையோ நாள் அம்மா இந்த ரூமுக்கு வருவாங்க..அப்ப அப்படி திட்டுவேன். ஸ்கூல்ல என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட அம்மா கூப்பிட்டு அறிமுகம் செய்ய வெட்கப்பட்டிருக்கேன் என இனியா அழுதுக் கொண்டே தெரிவிக்கிறார்.
அதற்கு ஜெனி வீட்டில் எல்லாம் பழையபடி மாறும். அனைவருக்கும் கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டுமென ஆறுதல் கூறுகிறார். அதனை கோபி ரூமுக்கு வெளியே நின்று கேட்டு வருத்தப்படுகிறார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் வருத்தத்தில் இருப்பதை பார்க்கும் கோபி, பாக்யா இல்லாத வீட்டை நினைத்து சோகமாகிறார். பின் தனது ரூமுக்கு கோபி சென்ற நிலையில் அவர் தூங்கி விட்டாரா என பார்க்க மூத்த மகன் செழியனும், அம்மா ஈஸ்வரியும் வருகின்றனர். அப்போது ஈஸ்வரி கோபிக்கு போர்வை போர்த்தி விடுகிறார். இதனையெல்லாம் பார்க்கும் கோபி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். இரவு முழுவதும் வீட்டில் யாருமே தூங்காமல் இருக்கிறார்கள்.
மறுநாள் பாக்யாவுடன் ஆபீஸில் இருந்த எழில் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் பாக்யா பற்றி அனைவரும் விசாரிக்கிறார்கள். அப்போது எழில் அம்மா என்ன முடிவு செய்தாலும் அதனை நம் அனைவரும் ஏற்று அவரோடு இருக்க வேண்டும் என கூறுகிறார்.அதற்கு ஈஸ்வரி என்ன முடிவு எடுக்க வேண்டியிருக்கு..கோபியும், பாக்யாவும் என்ன ஆனாலும் கணவன் -மனைவி தான் என கூறுவது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. விறுவிறுப்பாக சென்ற பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில நாட்களாக சோக காட்சிகளாக செல்வதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்