Baakiyalakshmi Serial : பாக்யா சொன்னது உண்மை.. வாயை திறந்த கோபி.. குடும்பத்தினரின் முடிவு என்ன?
மூத்த மகன் செழியன் கோபியை அவரது ரூமில் சென்று பார்க்கிறார். அப்போது நடந்தவற்றை எண்ணி அவரிடம் கோபி மன்னிப்பு கேட்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தான் செய்த தவறை எண்ணி மூத்த மகன் செழியனிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கோபி விவகாரம் முன்கூட்டியே தெரிந்திருந்தும் மூர்த்தியும், எழிலும் சொல்லியிருந்தால் இப்படி நடந்திருக்குமா என அவரது அம்மா ஈஸ்வரி கவலைப்படுகிறார். இதனைத் தொடர்ந்து மூத்த மகன் செழியன் கோபியை அவரது ரூமில் சென்று பார்க்கிறார். அப்போது நடந்தவற்றை எண்ணி அவரிடம் கோபி மன்னிப்பு கேட்கிறார். சிறு வயதில் நான் இருந்த நிலைமைக்கு நல்ல ஸ்டேட்டஸில் இருக்கும் ஒருவர் மனைவியாக வர வேண்டும் என நினைத்ததாகவும், ஆனால் தனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைத்ததாகவும் கூறுகிறார். மேலும் ராதிகாவுடனான பழக்கம் ஏற்பட்ட இந்த 2 ஆண்டுகளை தவிர இத்தனை ஆண்டுகளும் குடும்பம் தான் என முக்கியம் என நினைத்தேன்.
ஆனால் ஒரே ஒருமுறை என்னுடைய ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தது எவ்வளவு பெரிய தப்பு என்பதை நான் தெரிந்துகொண்டேன். என்னால் இந்த குடும்பத்தின் நிம்மதி எல்லாம் போச்சு. பாக்யா சொன்னது எல்லாமே உண்மை. என்னுடைய ஆசை, தவிப்பு தான் இப்படி தடுமாறிப்போக காரணமாக அமைந்து விட்டதாகவும் தன் நிலைமையை புரிந்து கொள்ளுமாறும் கூறுகிறார். செழியனும் உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது என கூறுகிறார். அப்போது செழியனின் மனைவி ஜெனி அங்கு வந்து கோபியை சாப்பிடுமாறு கூறுகிறார்.
ஆனால் அவரோ ஜெனியின் முகத்தை கூட பார்க்காமல் அம்மா,அப்பா, இனியா ஆகியோரைப் பற்றி விசாரிக்கிறார். அதன்பின் செழியன் ஜெனியை வெளியே செல்லுமாறு கூற முதலில் அவர் மறுக்கிறார். அதன்பின் செழியன் வற்புறுத்த செழியன் அங்கிருந்து செல்கிறார். அதன்பின் கோபி செழியனிடம் தன்னை மன்னிக்குமாறு கூறுகிறார். அப்படி சொன்னால் தனது மனது கொஞ்சம் நிம்மதி பெறும் என கோபி சொல்ல இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. இனிவரும் எபிசோடில் கோபி நிலையை எடுத்து சொல்லி செழியன் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்